உலகின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் 2009-ல் இருந்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து ரசிகர்களில் தனக்கென ஒரு கூட்டத்தை இவர் உருவாக்கி வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
ரொனால்டோ மைதானத்தில் இறங்கினால் ரசிகரகளின் ஆரவாரத்திற்கு பஞ்சம் இருக்காது. அதிக கோல் அடித்த வீரராக திகழ்ந்த ரொனால்டோ மாட்ரிட் அணியில் இருந்து விலகி இத்தாலியை சேர்ந்த ஜூவாண்ட்ஸ் அணியில் இணைந்தார்.
கால்பந்தாட்டில் மட்டுமின்றி இவரது ஆர்வம் உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பது மற்றும் கார்கள் மீதும் அதீத ஆர்மும் இவருக்கு உண்டு. அதன்படி இவரது வீட்டில் சொகுசு கார்களும் ஸ்போர்ட்ஸ் ரக கார்களும் வரிசையாக நிற்கிறது.
இந்த நிலையில் ஜூவாண்ட்ஸ் அணி 36-வது முறையாக சீரிஸ் ஏ சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடர்ந்து அதை கொண்டாடும் விதமாக புகாட்டியின் லிமிட்டெட் எடிசன் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியிருக்கிறார். புகாட்டி கார் ரொனோல்டோவிற்கு புதிதல்ல முன்னதாகவே இவரிடம் சிரோன், வேய்ரான் மற்றும் லா வொய்சர் நொயர் ரக புகார்டி கார்கள் உள்ளது.
புகாட்டி செண்டோடிசி கார் விலையானது நம்மை தலை சுத்த வைக்கிறது. இதன் விலை சுமார் 8.5 மில்லியன் யூரோ ஆகும் அதாவது ரூ.75 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் உலக அளவிலேயே மொத்தம் 10 யூனிட்கள் மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.
இந்த காரின் சிறப்பம்சம் குறித்து பார்க்கலாம். இதில் 8 லிட்டர் டபிள்யூ 16 என்ஜின் கொண்டது. இந்த காரில் அதிகபட்சமாக 1600 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டது. இந்த லேட்டஸ்ட் வெர்சன் காரை ஸ்டார்ட் செய்து 0 வில இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் தொட்டுவிடலாம். நாம் பிக்-அப் என்று உரைப்போமே அது 100 கிலோமீட்டர் வேகம் 2.4 வினாடிகள் என்பது அதீத வேகமாகும்.
இந்த கார் அதிகபட்சமாக 380 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் அடுத்த வருடம் தான் உரிமையாளருக்கு நிறுவனம் அனுப்பி வைக்கும்.