Home தொழில்நுட்பம் டெக்னாலஜி மெகா மோசடி: சில நிமிடங்களிலேயே ₹89 லட்சம் அபேஸ் - ஹேக்கர்கள் கைவரிசை!

மெகா மோசடி: சில நிமிடங்களிலேயே ₹89 லட்சம் அபேஸ் – ஹேக்கர்கள் கைவரிசை!

அமெரிக்க பிரபலங்களான ஒபாமா, ஜோ பைடன், எலான் மஸ்க், பில் கேட்ஸ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து, ₹89 லட்சம் மோடி செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் இணைய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்பது டிஜிட்டல் கரன்சியாகும். சாடோஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ளும் நபரால் பிட்காயின் கடந்த 2009ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது ஒரு குழுவால் உருவாக்கப்பட்டிருக்காலம் எனவும் பிட்காயினை கூர்ந்து கவனிக்கும் சிலர் கூறுகின்றன. ஆரம்ப காலத்தில் வெறும் $0.0003 ஆக இருந்த ஒரு பிட்காயினின் மதிப்பு படிப்படியாக அதிகரித்து 2017ம் ஆண்டில் $19,783ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த ஒரு பிட்காயின் மதிப்பு தற்போது, $9,107ஆக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ₹6,84,088 ஆகும். பிட்காயின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. இதில், என்க்ரிப்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் கணக்கு வைத்திருப்பவரின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்த ரகசியத்தன்மையை பயன்படுத்தி பிட்காயின்கள் மூலம் விஷமிகள் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களில் ஈடுப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அமெரிக்க பிரபலங்களான ஒபாமா, ஜோ பைடன்,எலான் மஸ்க், பில் கேட்ஸ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளில் இருந்து நேற்று திடீரென டுவீட் ஒன்று வெளியானது. அதில், கொரோனா காலத்தில் நான் இந்த சமூகத்திற்கு திருப்பி தர விரும்புகிறேன். கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்படும் பிட்காயின்கள் இரட்டிப்பாக திருப்பி வழங்கப்படும். நீங்கள் 1,000 டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன். 30 நிமிடங்களுக்கு மட்டுமே இதை செய்ய இருக்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த டுவீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களிலேயே அழிக்கப்பட்டன. ஹேக்கர்களின் நடவடிக்கையை தடுக்க, பிரபலங்களின் வெரிஃவைட் கணக்குகள் பலவற்றை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. புதிய டுவீட், கடவுச்சொல் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஆனால், அதற்குள் இந்த டுவீட்டுகளை நம்பி பலர் அந்த முகவரிக்கு பிட்காயின்களை வாரி வழங்கிவிட்டனர். இதில், $116,000 மதிக்கத்தக்க 12.58 பிட்காயின்களை அப்பாவி மக்கள் ஹேக்கர்களிடம் பறிக்கொடுத்துள்ளனர். இது உலகளவில் இணைய வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here