Home தொழில்நுட்பம் டெக்னாலஜி இந்தியாவை ஃபாலோ பண்ணும் அமெரிக்கா: டிக் டாக் செயலிக்கு அடுத்த ஆப்பு!

இந்தியாவை ஃபாலோ பண்ணும் அமெரிக்கா: டிக் டாக் செயலிக்கு அடுத்த ஆப்பு!

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீன நாட்டை சேர்ந்த டிக் டாக், ஹெலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. நாட்டின் இறையாண்மை, குடிமக்களின் தனி உரிமை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த செயலிகளின் லைட் வெர்சன்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்தார். 5 ஜி தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து உரிமைகள், வர்த்தக பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்கெனவே அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். பிளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பான ஆணையில் நாளை கையெழுத்திட போவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே , டிக் டாக் செயலியை வாங்குவதற்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட டிக் டாக் நிறுவனம், டிக் டாக் செயலி குறித்து வரும் செய்திகள், வதந்திகள் குறித்து பதில் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

கர்நாடகா கடும் எதிர்ப்பு; காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு சிக்கல்?

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல ஆண்டு கனவுத் திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி!

கன்னட சினிமாவில் கதாநாயகியாக கலக்கியவர் ஜெயஸ்ரீ ராமைய்யா. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பிக்பாஸ் சீசன்...

Related News

உச்சத்தில் உட்கட்சி பூசல்: ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்!

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டுள்ளார். நேபாள அரசியலில் அண்மை காலமாகவே சலசலப்பு நிலவி வருகிறது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், ஆளும் கட்சியான...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here