”என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர கூடிய நோயாக மாறிவிட்டது என எச்சரிக்கிறது மருத்துவ துறை. குறட்டை வருவது, தொண்டையில் அதிகம் சதை வளர்ந்து சுவாச குழாய்க்கு செல்லும் ஆக்சிஜனில் தடை ஏற்படுவதாலும்.
தூங்கும்போது, மூளையால் சுவாசிப்பதைக் கட்டுபடுத்த முடியாமல் போவதாலும் நடக்கலாம். மேலும், அதிக எடை, டான்சில் உள்ளவர்கள், சிறு தாடை இடமாற்றம் கொண்டவர்கள், 17 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் ஆண்கள், 16 இன்ச்சைவிட பெரிய கழுத்து இருக்கும் பெண்கள், அதிகம் புகைப்பழக்கம் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், சீரற்ற இதய துடிப்பு உள்ளவர்கள் மற்றும் சில மரபியல் காரணங்களும் குறட்டைப் பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது. இதனை மருத்துவ உலகில், ஸ்லீப் அப்னியா (sleep apnea) என்பார்கள்.
குடும்ப நபர்களில் மிகவும் தொந்தரவாக இருக்கும் செயல் என்றால் அது குறட்டை ஒன்றாக காணப்படுகிறது. களைப்பு உட்பட பல்வேறு காரணங்களால் குறட்டை ஏற்படுகின்றது.
எனினும் மருத்துவமுறையில் இதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இப்படியான நிலையில் DreamIT எனப்படும் இலத்திரனியல் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கையில் அணியக்கூடிய இந்த சாதனமானது குறட்டையை தடுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சுவாசத்தின் தன்மையை அடையாளம் கண்டு அதிர்வினை ஏற்படுத்துவதன் ஊடாக இச் சாதனம் குறட்டையினை தடுக்க உதவுகின்றது. இதன் விலையானது தற்போது 99 அமெரிக்க டாலர்களாக விற்பனை செய்யப்படுகின்றது.