கூகுள் மேப்பின் உதவியுடன் உலகின் எந்த மூலை முடுக்கிற்கும் வழிகாட்டுதலுடன் சென்றுவரக் கூடியதாக இருக்கின்றது. அந்த அளவிற்கு பல தகவல்களையும் அதில் அடக்கியுள்ளது கூகுள்.
இந்நிலையில் தற்போது ட்ராபிக் மின்விளக்குகள் உள்ள இடங்களையும் கூகுள் மேப்பில் தருவதற்கு அந்நிறுவனம் முயற்சித்து வருகின்றது. இதற்கான சோதனை முயற்சிகள் தற்போது மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக இந்த வசதியானது குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளில் முதலில் அறிமுகம் செய்யப்படும் என நம்பப்படுகின்றது.
இதன் மூலம் புதிய இடங்களுக்கு செல்லும் மக்கள் வாகனங்களை இலகுவாக செலுத்திச் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.