அனுப்பும் முன் வாட்ஸ்அப்பில் காணொலிகளை மியூட் செய்யும் வசதி…!
இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு புதிய அம்சத்தினை செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காணொலிகளை பயனர்கள் நண்பர்களுக்கு பகிரும் முன்பு அல்லது அவற்றை ஸ்டேட்டஸ் ஆக வைப்பதற்கு முன்பு மியூட் செய்ய அனுமதிக்கிறது.
டெல்லி: காணொலி பகிரும் முன் மியூட் செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது.
வாட்ஸ்அப்பின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக கண்காணித்து அறிக்கை வெளியிடும் வலைதளமான WABetaInfo மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் இப்போது புதிய மியூட் வீடியோ (mute video) அம்சத்தை உருவாக்கிவருகிறது என்றும் அது பீட்டா பயனர்களுக்கு சோதனைக்காக நிறுவப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இது தவிர வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட வால்பேப்பர் அம்சங்களையும்,செய்திகளை மறைக்கும் புதிய அம்சங்களையும் அதன் பயனர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.