கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஆன்லைனில் டவுண்லோடு களைச் சேமித்து வைக்கும் சேவையானது தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் கூகுளும் ஒன்றாகும்.
இதில் கூகுள் தனது ட்ரைவ் சேவையில் புதிய மாற்றம் ஒன்றினை கொண்டு வரவுள்ளது. அதாவது அழிக்கப்பட்ட நிலையில் Trash போல்டரினுள் சேமிக்கப்படும் பைல்களை தானியங்கி முறையில் அழிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி Trash போல்டரினுள் அனுப்பப்பட்ட பைல்களை 30 நாட்களில் அதன் பின்னர் நிரந்தரமாக அழிவடையும்.
மேலும் அவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களை எந்தவொரு வசதியை பயன்படுத்தியும் மீட்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது வருகின்ற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.
அடுத்ததாக, கூகுள் மீட் சேவையில் அதிரடி வசதி ஒன்றினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. லாக்டவுன் காலத்தில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் சேவைகள் மிகவும் பிரபல்யமடைந்திருந்தது அனைவரும் அறிந்ததே. மிகவும் பலரிடையே பரீட்சியமடைந்த நிலையில் தற்போதும் இந்த சேவைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை வழங்கிவரும் கூகுள் அதிரடி சில வசதிகளை அறிவித்துள்ளது. இதன்படி பின்னணியை மங்கலடையச் செய்யும் வசதி (Background Blur), ஒரே தடவையில் 49 பயனர்களைப் பார்வையிடக்கூடிய வசதி போன்றவற்றினை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றில் Blur வசதியானது ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும் இதனை செயற்படுத்துவதற்கு அட்மினின் கட்டுப்பாடு அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இணைய உலாவியில் இந்த வசதியினைப் பெறுவதற்கு எந்தவிதமான நீட்சிகளோ அல்லது மென்பொருட்களோ அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.