சார்லிஸ் தெரோன் நடிப்பில் வெளியான ‘தி ஓல்ட் கார்ட்’ என்ற அமெரிக்கன் சூப்பர் ஹீரோ திரைப்படத்தை கொண்டாடும் விதமாக நெட்ஃபிலிக்ஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட்ஃபிலிக்ஸ் பயன்பாட்டாளர்கள் அத்திரைப்படத்தின் பெயரில் உள்ள வீடியோ கேமில் பங்கேற்று வெற்றி பெற்றால் 83 ஆண்டுகள் (1000 மாதங்கள்) நெட்ஃபிக்ஸ் சேவையை இலவசமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘தி ஓல்ட் கார்ட்’ கிரெக் ருகாவின் காமிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டது. இதனைக் கொண்டாடும் விதமாக தான் இந்த வீடியோ கேமை நெட்ஃபிளிக்ஸில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த விளையாட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். விளையாட்டின் நோக்கம் எதிரிகளின் கூட்டத்தைத் தோற்கடிப்பது. இதில் நீங்கள் சார்லிஸ் தெரோனின் கதாபாத்திரத்தில் தான் விளையாடுவீர்கள். திரைப்படத்தை போலவே உங்களுக்கு அளிவு என்பேதே கிடையாது. ஆனால் நீங்கள் தாக்கப்பட்டால் உங்களுடைய சக்தி குறையும். மேலும் அதிக ஸ்கோர்ஸ் எடுக்க எதிரிகளை நீங்கள் தாக்க வேண்டும்.
“www.oldguardgame.com என்ற இணையதளம் மூலம் இந்த விளையாட்டில் பங்கு பெறலாம். மேலும் இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே என்பதை நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.