கலிபோர்னியா: நான்கு வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செய்தி செயலியை (ஆப்) பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்திவருகின்றனர். தொடக்கத்தில் அதன் பயன்பாடு எழுத்து மெசெஜ் அனுப்புவதாக மட்டும் இருந்தது. ஆனால் தற்போது புகைப்படங்கள், வீடியோ என பல வகைகளில் அனுப்பவதிலும் வாட்ஸ்அப் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்படி இருந்தாலும் வாட்ஸ் அப்பை கணினியில் பயன்படுத்திவிட்டு மொபைலில் பயன்படுத்தும்போது, கணினியில் பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளது. இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களது கணக்கை ஒரே நேரத்தில் பல கருவிகளில் பயன்படுத்த முடியாமல் தவித்தத்தனர்.
இந்த தவிப்பிற்கு செவி சாய்த்த வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது, பயனர்கள் தங்களின் ஒரே கணக்கை நான்கு வெவ்வேறு கருவிகளில் வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி மற்றோரு கருவியில் வாட்ஸ் பயன்படுத்தும்போது, சாட் ஹிஸ்டரி காப்பி செய்துகொள்ள வேண்டும். ஆனால் இனி அப்படி செய்ய வேண்டம். அதற்கு பதிலாக தானகவே பயனாளர் பயன்படுத்தும் நான்கு கருவிகளுக்கும் அனுப்பப்பட்டு, பயனாளர்களை வேலையை மிச்சப்படுத்தியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.முன்னதாக கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பரவிவரும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.