Home சுற்றுலா & உணவு வெளியூர் செல்கிறீர்களா ? ஸ்மார்ட்டாக பேக்கிங் செய்ய வழிமுறைகள் இதோ !

வெளியூர் செல்கிறீர்களா ? ஸ்மார்ட்டாக பேக்கிங் செய்ய வழிமுறைகள் இதோ !

பெரும்பாலான மக்கள் பயணம் மேற்கொள்ளும் போது செய்யும் மிகப் பெரும் தவறு அதிக துணிகளை எடுத்துச் செல்வது தான். பின்னர், அதனை பயன்படுத்தாமலே போவது. ஆனால் அவர்களிடம் இதுப் பற்றி கேட்டால், இதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் நீங்கள் எடுத்துச் செல்லும் பையின் எடை அதிகமாக உள்ளது என்று வருந்துவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. வெளியூர் செல்லும்போது ஸ்மார்ட்டாக எவ்வாறு பேக் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். சூட்கேஸின் எடையை அதிகப்படுத்தாமல் அதே நேரத்தில் அதிக துணிகள் மற்றும் பொருட்களை அடைவது எப்படி என்பதை பற்றியும் கீழே பார்க்கலாம்.

சிந்தித்தல் அவசியம்

புத்திசாலிதனமாக சிந்திப்பது மிகவும் அவசியம். முதலில் எங்கே பயணம் மேற்கொள்ள உள்ளீர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் அங்கு எங்கெல்லாம் சுற்றிப் பார்க்க போகிறீர்கள் என்பதையும் திட்டமிடுதல் நல்லது. ஆகையால் அதற்கேற்ப தேவையான பொருட்களை மட்டும் பேக்கிங் செய்து கொள்ளலாம். பேக்கிங் செய்ய தொடங்குவதற்கு முன் முதலில் சூட்கேஸில் என்ன இருக்கப் போகிறது என்பதை வகைப்படுத்த வேண்டும். இந்த பொருட்கள் அடங்கிய பட்டியிலை எழுதி வைப்பது நல்லது, குழப்பங்களை தவிர்க்கலாம்.மேலும் எதையும் தவறாமல் எடுத்து வைத்துக் கொள்ள உதவும்.

ஆடைகள் மற்றும் அணிகலன்களின் வண்ணங்கள்

மிக்ஸ் மேட்ச் செய்யக் கூடிய துணிகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கருப்பு, ப்ரவுன் மற்றும் வெள்ளை நிற ஆடைகள் சிறந்தவை. இதற்கேற்றார் போல் பொதுவாக பொருந்தும் சில கிலாஸியான அணிகலன்களை எடுத்துப் பேக் செய்து கொள்ளலாம். துணிச் சுமையை குறைப்பதற்கு இது ஏதுவாக இருக்கும்.

அழுக்கு துணிகளை கையாள்வது

வெளியூர் செல்லும் போது பயன்படுத்தும் துணிகளை துவைத்து காய வைப்பது என்பது முடியாத காரியம். அப்படி இருக்கும் போது பிளாஸ்டிக் பை ஒன்று எடுத்துச் சென்றாலே போதும். அழுக்கு துணிகளை எளிதாக அதில் பேக் செய்து விடலாம். உங்கள் சுத்தமான மற்றும் அழுக்கு துணிகளை தனித்தனியாக பிரித்து வைக்க இதுவே சிறந்த வழியாகும்.

வானிலை மாற்றங்கள்

வெயில் ,குளிர், பனி, மழைக் காலங்களுக்கு ஏற்றவாறு ஆடைகளை பேக் செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்த இடம் பற்றிய வானிலை குறித்து முன்பே அறிந்து வைத்திருப்பது சிறந்தது.

தேவையில்லா பொருட்கள்

நீங்கள் தங்கும் இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் பொதுவாக வழங்கப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் சோப்பு, துண்டு, ஹேர் ட்ரையர், சலவை வசதிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். அப்படி உள்ள சுழலில் லேசான துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டாலே போதுமானது, அது எளிதில் காய்ந்தும் விடும். இது போன்று சிந்தித்து நிச்சயம் அவசியம் என்ற பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here