Home சுற்றுலா & உணவு சட்டுப் பூட்டுனு ரெடியாகுங்க...விண்வெளிக்கு சுற்றுலா விரைவில் போகலாமாம்..!

சட்டுப் பூட்டுனு ரெடியாகுங்க…விண்வெளிக்கு சுற்றுலா விரைவில் போகலாமாம்..!

விண்வெளியைப் பற்றி தெரிந்துகொள்வதே சுவாரசியமான விஷயம் என்றால், விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எத்தனை ஆச்சரியங்களை அளிக்கும்? அந்தக் கனவும் நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் வெற்றி மூலம் தெரியவந்துள்ளது.

விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள்தாம் இதுவரை வெற்றியடைந்துள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்பேஸ் எக்ஸ் என்கிற தனியார் நிறுவனம். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனது சொந்த விண்கலத்தையே பயன்படுத்தி வந்தது. அதில் ஏற்படும் செலவு, பாதுகாப்பு விஷயங்களைக் கருத்தில்கொண்டு, 2011-ஆம் ஆண்டுமுதல் ரஷியாவின் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி வருகிறது.

இச்சூழ்நிலையில்தான் முதல் முறையாக ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலம் மூலம் ஐஎஸ்எஸ்-க்கு இரு வீரர்களை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி, பாப் பென்கன், டக் ஹர்லி ஆகிய இரு வீரர்கள் இரு மாதங்களுக்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த “டிராகன்’ என்கிற விண்கலம் மூலம் ஐஎஸ்எஸ்-க்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 63 நாள்கள் அவர்கள் ஐ.எஸ்.எஸ்.ஸில் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை முடித்த பின்னர், கடந்த ஆக. 1-ஆம் தேதி மீண்டும் அதே விண்கலத்தில் பூமிக்கு திரும்பத் தயாராயினர்.

வழக்கமாக விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் ரஷியாவின் சோயுஸ் விண்கலமானது இறக்கைகளைக் கொண்டது. அது பூமிக்கு திரும்பும்போது ஓடு பாதையில் விமானம் தரையிறங்குவதுபோலத் தரையிறங்கும். ஆனால், டிராகன் விண்கலமானது குடுவை போன்ற வடிவமைப்பைக் கொண்டது. ஆனால், சோயுûஸவிட அதிக இடவசதி கொண்டது. டிராகன் விண்கலமானது ஓடுபாதையில் இறங்க வழியில்லாத நிலையில் கடலில் பாராசூட் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. உடனே, மீட்புப் படகுகளில் சென்று, விண்கலத்தையும், அதிலிருந்த வீரர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த வெற்றி அமெரிக்க மக்களை மட்டுமன்றி, உலகம் முழுவதும் விண்வெளி ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் விண்கலத்தை தயாரிப்பதற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது என்றாலும், டிராகன் மீது எந்த பிரத்யேக உரிமையும் நாசாவுக்குக் கிடையாது. அதுபோல வெறுமனே விண்வெளி வீரர்களை மட்டும் அனுப்பும் பணியுடன் நில்லாமல், அடுத்தகட்டமாக பொதுமக்களையும் விண்வெளிக்கு சுற்றுலா போல அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
“விண்வெளி வீரர்கள் தமது ஆய்வுப் பணிக்காக விண்வெளிக்குச் செல்கிறார்கள் என்றால், செல்வந்தர்கள் ஒரு புதிய பார்வையில் உலகத்தைப் பார்ப்பதற்காக இந்த விண்வெளிப் பயணத்தை விரும்புவார்கள்; விண்வெளி வீரர்களை முதலில் அனுப்பி, பாதுகாப்பாக அழைத்து வந்து நிரூபிப்பதன் மூலம் விண்வெளிப் பயணம் குறித்த அச்சத்தைப் போக்க முடியும்’ என நம்பிக்கை தெரிவிக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

ஏற்கெனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு திரைப்படத்தை படம்பிடிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸூடன் ஸ்பேஸ் எக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here