ஃப்ரோசன் திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டுமா அப்படி என்றால் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் சீனாவின் நிங்வு குகை தான். இது சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தின் உ ள்ள அழகிய மலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த நிங்வு குகை சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இவ்வாறு தான் இருக்கிறது. மேலும் இந்த இடத்தில் இருக்கும் பனியானது கோடைக் காலத்தில் கூட உறையாமல் அப்படியே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த குகை கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்தில் உள்ளது. மேலும் சுமார் 280 அடி ஆழமான குகையாகும் இது. இந்த குகை முழுவதும் பனியால் சூழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பனி யுகத்தில் தான் இந்த குகை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அதனால்தான் உள்ளூர்வாசிகள் இந்த குகையை 10 ஆயிரம் ஆண்டு குகை என்றும் அழைக்கின்றனர். இந்த குகையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகளை வைத்து அலங்கரித்துள்ளனர். இந்த வெளிச்சத்தில் பனிக் கட்டிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
பனி உறையாமல் இருப்பதற்கு என்னதான் காரணம்
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், அதற்கு இந்த குகை கட்டமைக்கப்பட்டுள்ள விதம் தான் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். இந்த குகையானது உருண்டையாக வளைந்து இருப்பதால் குளிர்ந்த காற்று உள்ளே வந்து விட்டால், அது அப்படியே உள்ளேயே தங்கிவிடும். இது தான் குகையை குளிர்ச்சியாகவும், உறையாமலும் வைத்திருக்கிறது.
இது போன்ற பனி குகைகளை ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணலாம்.