கோவாவில் அனைவரும் செய்ய வேண்டிய பல அற்புதமான விஷயங்களும், சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களும் உள்ளன. கோவா என்றாலே நம் அனைவருக்கும் கடற்கரை காட்சிகள் தான் ஞாபகத்திற்கும் வரும், அதைத்தான் சுற்றுலா பயணிகளும் விரும்பிச் சென்று பார்பார்காள்.இந்த பதிவில் நீங்கள் பெரிதும் பார்த்திருக்காத கோவாவின் சில அம்சங்கள் உள்ளன. அடுத்த முறை கோவா செல்லும் போது இந்த இடங்களை நிச்சயம் நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும்.
அர்வலம் கேவ்
இந்த அழகிய இடம் வடக்கு கோவாவின் பிசொலிம் நகரில் அமைந்துள்ளது. அவை 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறையை குடைந்த குகைகள் ஆகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் பாண்டவர்கள் இந்த காட்டில் உள்ள குகைகளில் தான் தஞ்சம் புகுந்ததாக நம்பப்படுகிறது. இந்த குகைக்குள் சிவலிங்கம் மற்றும் புத்தரின் சிலை ஒன்று இருக்கிறது.இது கோவாவின் சிறந்த பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாகும்.
அனந்த் கோயில்
கோவாவிற்கு விடுமுறையை களிக்க வருபவர்கள் கண்டிப்பாக இந்த ஆனந்த் கோயிலை பார்க்க வேண்டும். அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு இந்த இடம் சொர்க்கமாக அமையும். இது சவோய்-வெரெம் கிராமத்தின் வெளிபுரம் அமைந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் இங்குதான் பகவான் ஆனந்த் (விஷ்ணு ) வசித்தார் என்றும் மற்ற தெய்வங்களும் வசிக்க விரும்பும் இடமாக இது இருந்தது என்றும் கூறப்படுகிறது.கோயிலைச் சுற்றிப் பல மைல் தூரத்திற்குப் பாக்கு மற்றும் தென்னை மரங்கள் சூழ்துள்ளன. இதற்கு நடுவில் தான் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த கோயில் பனாஜி நகரிலிருந்து 45 கிமீ உள்ளே இருக்கிறது.

துளசி விருந்தாவன்
கோவா என்றாலே கடற்கரைகள், கேசினோக்கள் என்று தான் பெரும்பாலம் நமக்கு தெரியும். இருப்பினும் கோவாவின் பாரம்பரிய பழக்கவழக்கங்களுள் ஒன்று இந்த துளசிச் செடி. ஒவ்வொரு வீட்டின் முட்புறத்திலும் துளசிச் செடி கட்டாயம் இருக்கும். துளசிச் செடி வைக்கபடும் பானைகள் கோவாவின் நாட்டுப்புறக் கலையைக் குறிப்பிடும் ஒன்று. அவை காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அன்றாட வழிபாட்டிற்கு வீட்டில் ஒரு துளசிச் செடியை கொண்டிருப்பதை அந்த ஊர் மக்கள் பெருமையாக கருதுவர். இது துளசி விருந்தாவன் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பைஸ் தோட்டம்
ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கோவாவின் சில பகுதிகளில், வெவ்வேறு மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரலாம். பல சுற்றுலாப் பயணிகள் இந்த வாசனைக்காகவே மசாலாப் பொருட்கள் விளையும் தோட்டத்திற்கு வருகை தருவார்கள். கோவாவில் உள்ள ஸ்பைஸ் தோட்டங்களை காண்பதற்கு 500 ரூபாய் இருந்தாலே போதுமானது. இங்கு ஒரு வேலை உணவு பஃபேட் முறையில் வழங்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் மசாலா பொருட்கள் வளர்க்கப்படும் விதம் மற்றும் அறுவடை பணிகள் ஆகியவற்றை கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி உங்கள் சமையலறைக்கு தேவையான மசாலா பொருட்களையும் வாங்கிச் செல்லலாம்.
டெவில்ஸ் கேனயோன்
இந்த இடத்தில் தான் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு அரக்கன் ஆட்சி செய்தான் . இங்குள்ள ஒவ்வொரு உயிரினமும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. ஒருமுறை, இந்த நிலத்தைச் சேர்ந்த ஒருவர் அரக்கனை ஏமாற்றி அவரது மீன்களை அபகரித்துச் சென்றார். அப்போதிலிருந்து, இந்த இடம் அரக்கனின் சாபத்தின் கீழ் உள்ளதாக உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர். மேலும் இங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் நீச்சல் செய்ய முயன்ற பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலரே இந்த இடத்தைப் பார்வையிடத் துணிந்ததால், இன்றளவும் ஒரு மர்மம் அடங்கிய இடமாக இது இருந்து வருகிறது.
டால்பின்ஸ்
டால்பின்களுடன் இணைந்து நீந்தி விளையாடலாம். இதற்கு அகுவாடா, பனாஜி ஜெட்டி அல்லது சின்குவெரிம் ஆகிய இடங்களுக்கு சென்று விளையாடி மகிழலாம்.