ஷாஜகான் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாடலில் ‘கறுத்தக்கோழி மிளகுப் போட்டு வறுத்து வச்சிருக்கேன்’ என்ற வரியை நடிகை மீனா சொல்வார். அந்த கறுத்தக்கோழிதான் இந்த கடக்நாத்தைக் கோழி. சரி கதைக்கு வருவோம்.
அது என்ன கடக்நாத் கோழி…!
நாட்டுக்கருப்புக் கோழி அல்லது கடக்நாத் கோழி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தது. இது “‘காலாமசி”‘ எனவும் அழைக்கப்படுகிறது (” கருஞ்சதைக் கோழி”). இந்த கோழி இனம் இதன் கருப்பு இறைச்சிக்கும், நல்ல சுவைக்கும் புகழ்பெற்றது. இதன் இறைச்சி உண்பதால் நல்ல வீரியம் உண்டாவதாக நம்பப்படுகிறது. இதன் உடலில் மெலனின் நிறமி மிகுந்து காணப்படுவதால் இவ்வாறு காணப்படுகிறது.
இப்பறவை முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. கருப்பு தோகையில் பச்சை நிறம் கலந்து வானவில்லில் உள்ளது போன்ற வண்ணங்கள் கொண்டதாகவும், இதன் இறைச்சி, எலும்புகள் போன்ற அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தக் கோழியின் தோல், அலகு, கால் விரல்கள், பாதம் போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும். கொண்டை, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதன் இறைச்சியில் உள்ளதாகக் கூறப்படும் மருத்துவ குணங்களால் இதன் இறைச்சிக்கு அதிக தேவை உள்ளது. இதனால் இந்தக் கோழிகளை அழிவில் இருந்து காக்க, மாநில அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு இந்த கோழியை வளர்க்க நிதி ஆதரவு மற்றும் உதவி பெறும் திட்டத்தை துவங்கியுள்ளது. இக்கோழி இனம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும் மேச்சல் முறையிலும் வளர்க்கப்படுகிறது.
கல்லாவை நிரப்பும் ‘கடக்நாத்’கோழி வளர்ப்பு
கடக்நாத் கோழிக் குஞ்சுகள் 100 வாங்கி பண்ணையாளர் தொழில் தொடங்கினால், விற்பனைவாய்ப்புக்கு ஏற்றவாறு கடக்நாத் கோழிகள் பன்மடங்கு லாபம் தரும். நாட்டுக் கோழி வளர்ப்பில் முட்டை விற்பனை, குஞ்சுகள் விற்பனை, வளர்ந்தக் கோழி விற்பனை என்று மூன்று வகையில் வருமானம் ஈட்ட முடியும்.
முட்டை விற்பனை என்று எடுத்துக் கொண்டால், நூறு தாய்க்கோழிகளிடமிருந்து ஆண்டுக்கு தலா நூறு முட்டை என்ற கணக்கில் 10 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும். ஒரு கடக்நாத் முட்டையின் விலை 40 ரூபாய். பத்தாயிரம் முட்டைகளுக்கு 40 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் வருமானம் பார்க்கலாம்.
அதுவே குஞ்சு விற்பனை என்றால், பத்தாயிரம் முட்டைகளையும் குஞ்சுகளாக வளர்க்கையில் நூறு சதவீதமும் குஞ்சுகள் கிடைப்பதில்லை. 75 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 7 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் கிடைக்கும். ஒரு கோழிக்குஞ்சு 60 ரூபாய்க்கு விற்பனைவயாகிறது. எனில் 7 ஆயித்து 500 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ 4லட்சத்து 500 வருமானம் ஈட்டலாம்.
இறைச்சிக்காக கோழி வளர்க்கையில் 7 ஆயிரத்து 500 கோழிக் குஞ்சுகளையும் வளர்க்கையில் அதில் 10 சதவீதம் கழிந்து 750 கோழிகள் இல்லாமல் போனாலும் 6 ஆயிரத்து 750 தாய்க் கோழிகளை வளர்த்துவிடலாம். சராசரியாய் 6 ஆயிரம் கோழிகள் என்று வைத்து கொண்டாலும் ஒரு உயிர்க் கோழி 400ரூபாய், 6 ஆயிரம் கோழிக்கு ரூ 24 லட்சம் வருமானம் கிடைக்கும்.