இந்தியாவின் முதன்மை நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், உலகின் மிக பெரிய பிராண்ட் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய பிராண்ட் டிரான்ஸ்ஃபோர்மேஷன் நிறுவனமான ஃபியூச்சர் பிராண்ட் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் 2020 பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பிரண்டாக மாறியுள்ளது. இது ஆப்பிளுக்கு அடித்தப்படியான நிறுவனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2020 பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் எப்போதும் போல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில் முதன்முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதில் உளக பிரபல நிறுவனங்களான சாம்சங், நைக், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் மற்றொரு ஆய்வான பிடபில்யூசி முடிவில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 91 ஆவது இடத்தில் உள்ளது. இருப்பினும் பியூச்சர் பிராண்ட்டில் ரிலையன்ஸ் இரண்டாவது இடம் பிடித்ததற்கான காரணத்தை அறிவிக்கையில், இந்த ஆண்டு மொத்தமாக 15 புதிய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது.
அதோடு இந்த ஏழு நிறுவனங்கள் முதல் 20 இடத்தை பிடித்துள்ளது எனவும் ரிலையன்ஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் உலகளாவிய சிறந்த 100 நிறுவனங்களின் நிதி வலிமையை விட புலனுணர்வு வலிமையின் சந்தை மதிப்பை அடிப்படையாக கொண்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி ஜியோவில் முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். அதோடு இந்தியாவில் குறைந்த விலை 5 ஜி ஸ்மார்ட்போன்களை கூட்டாக தயாரிக்க உள்ளதாக அம்பானி அதில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ்,ஜெனரல் அட்லாண்டிக், கே.கே ஆர், முபதாலா உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.