Home வணிகம் தொழில் நடுத்தர குடும்பத்திற்கான குறுநிதி மற்றும் குறுங்கடன் சிறப்புகள்....!

நடுத்தர குடும்பத்திற்கான குறுநிதி மற்றும் குறுங்கடன் சிறப்புகள்….!

வறுமையில் வாடும் குடும்பங்கள், உபயோகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தங்களுடைய சிறுதொழில்களை வளர்த்துக் கொள்ளவும், மிகச்சிறிய தொகையினை கடனாக வழங்குவதே குறுநிதி என பலரும் கருதுகிறார்கள். காலப்போக்கில், சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு போன்ற நிதி தொடர்பான பல தேவைகள் இருந்தும், முறைப்படுத்தப்பட்ட நிதியுதவி நிறுவனங்களை நாட இயலாத ஏழை மக்களுக்கு, பல சேவைகள் வழங்கும் வகையில் குறுங்கடன் திட்டம் விரிவடைந்து விட்டது.

குறுநிதி திட்டம் முப்பது வருடங்களுக்கு முன்பே வங்காளதேசம், பிரேசில் மற்றும் இதர நாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டிருந்தாலும், 1980களில் தான் அது முக்கியமான திட்டமாக முன்னிலைப்படுத்தப்பட்டது. முந்தையக் கட்ட இலக்கு சார்ந்த முன்னேற்றக் கடன் திட்டங்கள் போலல்லாமல், திருப்பி செலுத்துதல், நிர்வாக செலவுகளை பெறும் வகையில் வட்டி வசூலித்தல், தொழில்முறையல்லாத வழிகளில் கடன் பெற்று வந்த இலக்கு மக்களின் பல தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றை வலியுறுத்துவதன் மூலம், பல குறைகள் இதில் நீக்கப்பட்டதே இதன் சிறப்பாகும்.
குறிப்பிட்ட துறைகளை செயற்கையாக தூக்கி நிறுத்தும் வகையில் விரைவாக மானியங்களுடன் கடன் வழங்கி வந்த முறையிலிருந்து, ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நிலையான நிநிறுவன அமைப்புகளை உண்டாக்கும் முறைக்கு தற்போது முக்கியத்துவம் மாறியுள்ளது. குறுநிதித் திட்டங்கள் பெரும்பாலும், லாபம் மற்றும் அரசியல் நோக்கில்லாத தனியார் நிறுவனங்களால் துவங்கப்படுவதால், மற்ற முன்னேற்ற கடன் திட்டங்களை விட நன்கு செயல்படுகின்றன.

பொதுவாக, குறுநிதித் திட்டங்கள், வாடிக்கையான கடன் வகைகளை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. மற்ற மக்களைப் போலவே, ஏழைகளுக்கும் அன்றாடத் தேவைகளுக்கும், சொத்துகளை உருவாக்கவும், எதிர்பாராத இடர்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பல்வேறு விதமான கடன் திட்டங்கள் தேவைப்படுகின்றன. எனவே குறுநிதி திட்டங்களின் வீச்சு பரவலாவதை காண்கிறோம்: பல்வேறு சேவைகளை சிறப்பாகவும் நம்பகமாகவும் வழங்குவதே தற்போதைய சவாலாக உள்ளது.

குறுங்கடன் என்றால் என்ன?

கிராமங்கள், புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்ளவும், அவர்களின் வருமானத்தினை பெருக்கிக்கொள்ளவும் மிகச்சிறிய தொகையினை கடனாக அல்லது இதர நிதியுதவி சேவையாக வழங்குவதே குறுங்கடன் எனப்படும். இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், குறுங்கடன் நிறுவனங்கள் எனப்படுகின்றன.

குறுங்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்ன ?

வங்கிகள், பொதுவான விதிமுறைகளைப் பொறுத்து, தங்கள் கடன் திட்டங்களை வடிவமைத்துக்கொள்ள சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கடன் மற்றும் சேமிப்புத் திட்டங்களையும் மற்றும் அவை தொடர்பான கடன் அளவு, முதிர்வு காலம், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் கடன் செலுத்த அளிக்கப்படும் கூடுதல் கால அவகாசம் போன்றவற்றை வடிவமைக்கும்படி வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய கடன் திட்டங்கள் பண்ணை சார்ந்த மற்றும் சாராத, வறிய மக்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு திட்டங்களுக்கு மட்டுமன்றி, மற்றும் அவர்களின் பிற கடன் தேவைகளான வீடு கட்டுதல், வீட்டினை மாற்றியமைத்தல் போன்றவற்றுக்கு கடன் அளிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

குறுநிதிக்கும் குறுங்கடனுக்கும் என்ன வித்தியாசம்?

குறுநிதி என்பது குறைந்த வருமானமுள்ள மக்களுக்காக அளிக்கப்படும் கடன், சேமிப்பு, காப்பீடு, மற்றும் நிதி தொடர்பான திட்டங்களை உள்ளடக்கியது. குறுங்கடன் என்பது வங்கிகளின் மூலமாகவோ அல்லது இதர நிறுவனங்கள் மூலமாகவோ ஒரு நுகர்வோருக்கு சிறிய தொகையினை கடனாகக் கொடுப்பதாகும். குறுங்கடன், பெரும்பாலும் உத்திரவாதங்கள் இன்றி தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவின் மூலமாகவோ வழங்கப்படலாம்.

குறுநிதியின் பயனாளிகள் யார்?

முறைப்படுத்தப்பட்ட நிதியுதவி அளிக்கும் நிறுவனங்களை நாட இயலாத வருமானம் குறைவாக உள்ள நபர்களே பொதுவாக குறுநிதித் திட்டத்தின் பயனாளி ஆவார்கள். குறுநிதி நுகர்வோர், பெரும்பாலும், சுய தொழில் புரிபவர் அல்லது குடிசைத்தொழில் முனைவோராக உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள குறு விவசாயிகள் அல்லது உணவுப்பொருள் தயாரிப்போர், சிறுதொழில் செய்வோர் அல்லது சிறு கடை வைத்திருப்போர் இத்திட்டத்தின் முக்கிய பயனாளிகள் ஆவர். நகர்ப்புறங்களில் கடைவைத்திருப்போர், சேவைத்தொழில் செய்பவர்கள், வீதியில் பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள் அல்லது இதர கைவினைஞர்கள் ஆகியவர்களை உள்ளடக்கி, இது பரவலாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நிலையான வருமானமுடைய ஏழைகள் அல்லது ஏழைகளாக இல்லாவிட்டாலும், பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகக்கூடியவர்களே குறுநிதித் திட்டங்களின் நுகர்வோராக உள்ளனர்.

முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களை அணுகி கடன் பெறுவது நேரடியாக வருமானத்துடன் தொடர்புடையது. எனவே நிலையான வருமானமற்ற ஏழை மக்கள் இந்நிறுவனங்களை அணுகுவது கடினமாக உள்ளது. எனவே வறுமையில் இருக்கும் மக்கள் முறைப்படுத்தப்படாத நிதி ஆதாரங்களை தங்களது பணத்தேவைகளுக்காக நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இவ்வாறு முறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் கடனுதவி ஏழை மக்களின் சில நிதித்தேவைகளுக்கு பயன்படுவதில்லை அல்லது ஏதாவது வகையில் பலரும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு புறக்கணிக்கப்படும் மக்களை கொண்ட மிகப்பெறிய சந்தை, குறுநிதித் திட்டங்களால் பயனடைகின்றது.

குறுநிதித் திட்டங்களின் மூலம் அளிக்கப்படும் சேவைகளை விரிவுபடுத்தும்போது அத்தகைய சேவைகளை உபயோகிக்கும் நுகர்வோர்களின் சந்தையும் விரிவடைகிறது. எடுத்துக்காட்டாக குறுங்கடன் திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட சேவைகளின் மூலம் பலவிதமான சேமிப்புத்திட்டங்கள், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக மிகவும் வறிய விவசாயிகள் கடன் வாங்குவதை விரும்பாவிட்டாலும், அவர்கள் பயிர் அறுவடை செய்யும் போது கிடைக்கும் வருமானத்தினை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேமித்து பின்பு தங்கள் தினசரி வாழ்க்கைக்காக செலவழிக்க விரும்புவர்.

குறுநிதித் திட்டங்கள் எவ்வாறு ஏழை மக்களுக்கு உதவுகின்றன?

குறுநிதித் திட்டங்கள் ஏழை மக்களுக்கு அவர்களை வருமானத்தினை பெருக்கவும், ஒரு இலாபகரமான வியாபாரத்தினை உருவாக்கவும், எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது என்பது, அனுபவங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமையிலுள்ள மக்களை முக்கியமாக பெண்களை சுயமுன்னேற்றப்படுத்தி பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.

வறுமை பலவித பரிமாணங்களைக் கொண்டது. நிதியுதவி சேவைகளை ஏழை மக்களுக்கு அளிப்பதன் மூலம், இத்திட்டங்கள் பல்வேறு வழிகளில் வறுமைக்கு எதிரான போரட்டத்தில் உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வியாபரத்தின் மூலம் மக்களின் வருமானம் அதிகரிக்கும்போது, அது அவர்களின் குடும்பவருமானத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அக்குடும்பத்தின் உணவுப்பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. பல்வேறு வகைகளில் பொது வாழ்விலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை நிதி சேவைகளுக்காக அணுகும் போது அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், முன்னேற்றத்திற்கும் குறுநிதித் திட்டங்கள் உதவுகின்றன.

சமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் வறுமைக்கோட்டிற்கு அருகிலுள்ள மக்கள், சம்பாதிக்கும் நபரின் உடல்நலக் குறைவு, பருவநிலை மாற்றங்கள், திருடு போதல் மற்றும் இதர எதிர்பாராத அதிர்ச்சிகளால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு எதிர்பாராத நிகழ்வுகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குடும்பத்தின் நிதி ஆதாரங்களின் மீது அதிக சுமை ஏற்படுவதால், போதுமான நிதியுதவி சேவைகள் இல்லாத நிலையில் அந்தக் குடும்பம், மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

Related News

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here