Home வாகனங்கள் பைக் மூன்று அசத்தல் மாடல்கள்.. இந்த ஆண்டு இறுதிக்குள் !

மூன்று அசத்தல் மாடல்கள்.. இந்த ஆண்டு இறுதிக்குள் !

இத்தாலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மோட்டார் வாகன நிறுவனமான டுகாட்டி இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மூன்று வாகனங்களும் பி.எஸ்.6 எஞ்சின் கொண்டவையாகும். இதில் முதல் வாகனமான பனிகேல் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என டுகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியான மோட்டார் இருசக்கர வாகனம் இந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. மேலும் இது மல்டிஸ்ட்ராடா குடும்பத்தைச் சேர்ந்தது என்று இதன் உற்பத்தியாளர் கூறுகிறார். பிஎஸ் 6 எஞ்சினுடன் அறிமுகப்படுத்தபட உள்ள இந்த வாகனம் எந்த மல்டிஸ்ட்ராடா மாடலை
தழுவியது என்பது குறித்து எந்த ஒரு செய்தியும் இல்லை. இருப்பினும் 950 சிசி பி.எஸ் 6 எஞ்சினுடன் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நவம்பரில் டுகாட்டி நிறுவனம் பிஎஸ் 6 எஞ்சினுடன் கூடிய ஸ்க்ராம்ப்ளர் 800 மாடல்களை நவம்பர் மாதத்தில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஸ்க்ராம்ப்ளர் மாடலுக்கு என்று தனி மவுஸ் உள்ளது. ஏனெனில் அதிகம் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றாகும்.

இதன் பின்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் டுகாட்டி அறிமுகப்படுத்த விருக்கும் மூன்றாவது மாடல் தான் ஸ்க்ராம்ப்ளர் 1100 ஆகும். இதுவும் பி.எஸ்.6 எஞ்சினுடன் தயாரிக்கப்பட்டது. இந்த மாடல் இந்தியாவில் அதிகம் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ் 6 ஸ்க்ராம்ப்ளர் 1100 டுகாட்டி மாடல் புதிய மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிஎஸ் 4 எஞ்சினுடன் கூடிய ஸ்க்ராம்ப்ளர் 1100 சிறிய அளவிலேயே விற்பனை ஆனது. ஆகையால் அது குறித்து ஆராய்ந்த பின் இந்த புதிய மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் மாசை குறைக்கும் நோக்கில் அனைத்து வாகனங்களும் பி.எஸ்.6 எஞ்சினுடன் தான் இனி வெளிவர வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியாக கெடு விதித்திருந்தது. ஆனால் அதற்குள் கோவிட் – 19 தொற்று ஏற்பட்டதால் மாடல்களை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here