ராயல் என்பீல்டு பைக் என்றால் எப்போதும் தனி மவுசு உண்டு. இளைஞர்கள் பெண்கள் முதல் அனைத்து தரப்பு வயதினரையும் ஈர்க்க வைத்திருக்கும் வாகனங்களில் பிரதானமாக திகழ்வது ராயல் என்பீல்டு பைக் தான்.
தற்போது வரை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒரு சில மாடல்கள் தவிற வேறு என்ன மாடல் வேண்டுமானாலும் பணம் கட்டி புக் செய்து காத்திருக்கவேண்டும். இவ்வாகனமானது தனது புதிய படைப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிரவைத்து வருகிறது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களை கவருவதற்கு கூடுதலாக ஒரு சிறப்பு சலுகையை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பானது தங்கள் நிறுவனத்தின் ஆடை, தலைக் கவசம் போன்ற ரைடிங் பொருட்களுக்கு ஆகும். எண்ட் ஆஃப் சீசல் சேல் என பெயரிடப்பட்டுள்ள இந்த பொருட்களுக்கு 40 சதவீதம் வரை சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.
ராயல் என்பீல்டு பைக்கிற்கு இணையாக அதன் ஆடை, ஹெல்மெட், க்ளவுஸ் போன்ற பொருட்களுக்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பு சலுகையை ராயல் என்பீல்டு ஸ்டோர் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை, ஹெல்மட் உள்ளிட்ட ராயல் என்பீல்டு தயாரிப்புகள் பிரத்யேக வடிவமைக்கப்பட்டதோடு உயர் ரக தயாரிப்பில் விற்கப்பட்டு வருகிறது. இதன் விலையும் அதன் தரத்திற்கேற்ப உள்ளது என்றே கூறலாம். அதன்படி தற்போது மூன்றடுக்கு வானிலைகளில் அணியக் கூடிய ஜாக்கெட் ரூ.14000, சம்மர் ஜாக்கெட் ரூ.7000, காட்டன் ரைடிங் ஜாக்கெட் ரூ. 5800 என்ற விலையில் விற்கப்படுகிறது.
முழு ஹெல்மெட் ரூ.3700, அரை ஹெல்மெட் ரூ.2700 மற்றும் லெதர் க்ளவுஸ் ரூ.3300, சம்மர் க்ளவுஸ் ரூ.2500-க்கும் விற்கப்படுகிறது. இந்த சலுகையோடு புதிய மாடல் பைக் ஒன்றும் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.