Home வாகனங்கள் பைக் மவுசின் மன்னன் ராயல் என்ஃபீல்டு இ பைக் !

மவுசின் மன்னன் ராயல் என்ஃபீல்டு இ பைக் !

பைக்குகளின் வாடிக்கையாளர் மத்தியில் மவுசின் முடிச் சூடா மன்னனாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு இ பைக் ஒன்றை தயாரித்துவருகிறது. அது குறித்தான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சக்தியால் இயக்கப்படும் வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles-EV) எனப்படுகின்றன. இவை சுற்றச்சூழலுக்கு உகந்தவை என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தேடலும், விழிப்புணர்வும் மக்களிடம் தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.

கச்சா எண்ணெயின் நிலையற்ற தன்மை, அதீத விலை மாறுபாடுகள், சர்வதேச வியாபாரப் போக்கு, எண்ணெய் இறக்குமதியில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்டவை உலக நாடுகளை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்ப வைத்துள்ளன. எனவே, இத்தகைய வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கும் பெரும் நன்மை அளிக்கக்கூடியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவேதான், பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. எனவே, இத்தகைய கார்களின் வணிகமயமாக்கலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
அந்தவகையில், இந்தியாவிலும் அதற்கான பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல இடங்களில் சார்ஜிங் பாய்ண்டுகளை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையுணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை மின்வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பி வருகின்றன. அந்தவகையில், பைக்கில் வாடிக்கையாளர்களின் முடிச்சூடா மன்னனாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு விரைவில் மின்சார மோட்டார்சைக்கிளை (இ பைக்) தயாரிக்கும் பணியில் இறங்கிவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தற்போது வரை 300 சிசி-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து பைக்குகளை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு, முதல் முறையாக முதல் முறையாக அதிக திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தை தயாரிக்க இருக்கின்றது. இதற்கான மாதிரி மாடலையே அந்நிறுவனம் தயார் தற்போது செய்திருக்கின்றது. விரைவில் அதனை உற்பத்தி மாடலாக உயர்த்தி, அதையே அது விற்பனைக்கும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த பைக்குறித்த புகைப்படங்கள் மற்றும் தற்போது இணையத்தில் டிரெண்டாகத் தொடங்கியிருக்கின்றன. புல்லட் மாடலில் காட்சியளிக்கும் அந்த பைக்கில், ஃபோட்டான் என்ற கிராஃபிக் ஒட்டப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, பைக்கின் எஞ்ஜின் உள்ளிட்ட பகுதிகள் மின்சார பாகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக பாக்ஸ் போன்ற அமைப்பிற்குள் நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்த தோற்றத்திலேயே எதிர்கால ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், ராயல் என்ஃபீல்டு களமிறக்க இருக்கும் மின்சார பைக்கில் என்ன மாதிரியான திறனுடைய பேட்டரி மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட இருக்கின்றது என்ற தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து, பைக்கின் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலும் ரகசியும் காக்கப்பட்டு வருகின்றது.

இந்த பைக் 2022ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here