ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியாச்சு. முன்னாடி நடந்த மூனு சீசனிலும் சில நாட்களுக்கு பிறகுதான் பரபரப்பான சண்டை ப்ரோமோ வெளியாச்சு. ஆனா இந்த சீசன்ல முதல்நாளே செம செய்கையான ப்ரோமோ வெளியாகியிருக்கு.
ஓம் கோவிட்ட நாமம் சங்கீர்த்தனம் என்ற மந்திரத்தோடு கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்த தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சியில பங்கேற்கும் 16 போட்டியாளர்களையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். இதுல ஒரு டுவிஸ்ட் என்னனா இதுல வந்த 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் முன்னதாகவே கமலஹாசனை சந்தித்து அறிமுகமானவர்கள்.
போட்டியாளர்கள் பட்டியலை குறித்து பார்த்தோமானால் ரியோ, ரம்யா பாண்டியன், நெடுஞ்சாலை ஹீரோ ஆரி, அறந்தாங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ், நடிகை ரேக்கா இவர்கள் அனைவரும் நமக்கு தெரிந்தவர்களே
சனம் ஷெட்டி பிரபல மாடல், நடிகை இவர் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் தர்ஷனின் காதலி
மாடலிங்துறை பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்த ஷிவானி, பல்வேறு புகழ்பெற்ற பாடல்களை பாடிய பின்னணி பாடகர் வேல்முருகன், பாக்ஸர் சோமு, விஜய் டிவி நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய கேபிரியலா, மாடலிங் மற்றும் நடிகையான சம்யுக்தா, திரைத்துறையை சேர்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி, பின்னணி பாடகர் ஆஜித் இவுங்கெல்லாம் உள்ள போயிருக்காங்க
இதன் முதல் நாள் ப்ரோமோ வெளியாகியிருக்கு. இதுல அனைவரும் சேர்ந்து ஷிவானியை ஓரங்கட்டி என்னமா இப்படி நடிக்கிற என்று சண்டையிட தொடங்கும்படியாக உள்ளது. மாஸ்டர் பாடலோடு விடிந்த பிக்பாஸ் வீடு உச்சக்கட்ட மோதலோடு நகரத் தொடங்கியிருக்கு. என்னதான் நடக்குதுனு இன்னைக்கு பார்க்கலாம்.