இயக்குனர் மகேஷ் பட்டின் எழுத்து, இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’சதக்-2’. இந்தத் படம் 1991ஆம் ஆண்டு சஞ்சய் தத் மற்றும் பூஜா பட் நடிப்பில் வெளிவந்த ’சடக்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்தப் படம் வெளியாகி பல வருடங்கள் கடந்த பிறகு தற்போது சதக்-2 வெளியாகிறது.
ஆலியா பட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், நடிகர் சஞ்சய் தத், பூஜா பட், ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் க்ரொவர், மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகேஷ் பட் & முகேஷ் பட்டின் விஷ்வேஸ் பிலிம்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூயோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சாதனை என்ன?
சதக் 2 படத்தின் ட்ரெயிலர் 24 மணி நேரத்துக்குள் 5 மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்ஸை பெற்று மோசமான சாதனையை படைத்துள்ளது.
டிஸ்லைக்கிற்கான காரணம் என்ன?
சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆலியா பட்டின் குடும்பமும் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட், சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தியுடன் நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலானது. இதில் ரியா சக்ரவர்த்தி சுஷாந்தை பிரிய மகேஷ் பட்டுடனான தொடர்புதான் காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டிவந்தனர். சுஷாந்த் மரணமடைந்த போதே, ஆலியா பட், சல்மான் கான், கரன் ஜோகர் உள்ளிட்டோரை கேங்க் அரசியல் செய்கிறார்கள் என கழுவி ஊற்றினர். இந்த நேரத்தில் சதக் 2 ட்ரெயிலர் வெளியானதையடுத்து தங்களது வெறுப்பை நெட்டிசன்கள் காட்டியுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சுஷாந்த் ரசிகர்கள், வெறித்தனமாக டிஸ்லைக்குகளை அள்ளிக் கொட்டி வருகின்றனர். உலகில் எந்தப் படமும் செய்யாத மிக மோசமான சாதனை இது என பாலிவுட் மீடியாக்கள் விமர்சித்து வருகின்றன..
சதக் இப்படி ஒரு கேவலமான சாதனையை படைக்க மகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது ரசிகர்களுக்கு உள்ள கோபமே காரணம் என கூறப்படுகிறது. சுஷாந்த மரணமே சதக் 2 ட்ரெயிலரில் எதிரொலித்துள்ளது என்றும் பாலிவுட் வட்டாரங்கள் கூறிவருகின்றன.
டிரைலருக்கே இப்படினா படத்திற்கு…!
சதக் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் படம் ரீலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுஷாந்த் ரசிகர்கள் தயாராகிவருவதாக நெட்டிசன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.