கன்னட சினிமாவில் கதாநாயகியாக கலக்கியவர் ஜெயஸ்ரீ ராமைய்யா. இளம் நடிகையான இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ, இவர் ஜனவரி 25 வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரை சடலமாக மீட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்துவந்தார் என கூறப்படுகிறது.
மன அழுத்தம் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. அதேபோல் இவர் கடந்த ஜூலை மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் I quit. Goodbye to this world and depression என பதிவிட்டிருந்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி அதிர்ச்சியடையவே ஜெயஸ்ரீ அந்த பதிவை நீக்கினார். அதேபோல் இவர் பப்ளிசிட்டிக்காக இந்த பதிவை போட்டுள்ளார் என பலரும் கூற, இது பப்ளிசிட்டிக்காக இல்லை உண்மையிலேயே தான் மன அழுத்ததால் சிக்கி தவிப்பதாக பேஸ்புக் நேரலையில் அவர் கூறினார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.