Home சினிமா கிசு கிசு கன்னத்தில் எப்படி காயம்?- நள்ளிரவு வரை இன்ஸ்டாவில் இருந்த நடிகை சித்ரா அதிகாலை தற்கொலை!

கன்னத்தில் எப்படி காயம்?- நள்ளிரவு வரை இன்ஸ்டாவில் இருந்த நடிகை சித்ரா அதிகாலை தற்கொலை!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமானார். அண்மையில், இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று அதிகாலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓட்டலில் அவருடன், அவரது வருங்கால கணவரும் உடனிருந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா முகத்தில் 2 இடங்களில் காயம் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நேற்று நள்ளிரவு வரை இன்ஸ்டாகிராமில் நடிகை சித்ரா ஆக்டிவாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி மற்றும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுகள் மகிழ்வான மனநிலையை வெளிப்படுத்துவதாக இருந்த நிலையில், சில மணி நேரங்களில் அவர் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் தான் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை பெயர் ஹேமந்த் ரவி, அவர் பிசினஸ் செய்கிறார் என்றும் வீட்டுல் பார்த்த மாப்பிள்ளை என்றும் டிவி ஷோவில் மாப்பிள்ளையை கையோடு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் சித்ரா.

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சித்ரா பங்கேற்றபோது, அவருக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக ஹேமந்தை வரவைத்து, அவரை ப்ரொபோஸ் செய்ய வைத்து, கையில் மோதிரம் மாட்டிவிடும் தருணமும் நடந்துள்ளது.

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில்தான் தற்போது சித்ரா தற்கொலை செய்துள்ளார். இரவு சூட்டிங் முடித்துவிட்டு நள்ளிரவு வரை இன்ஸ்டாவில் இருந்த சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி மர்மமாக உள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here