Home சினிமா கிசு கிசு மீண்டும் பாலிவுட்டில் தலைத்தூக்கும் #MeToo விவகாரம்...!

மீண்டும் பாலிவுட்டில் தலைத்தூக்கும் #MeToo விவகாரம்…!

பாலிவுட் நடிகரும் திரைப்பட இயக்குநருமான சஜித் கான் மீது, தன் இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக பெண் ஒருவர் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்துள்ளார்.

ஹவுஸ் ஃபுல் திரைப்பட சீரிஸை இயக்கியவரும், பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ஃபரா கானின் சகோதரருமான சஜித் கான் மீது கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி ‘Me too’ இயக்கத்தின்கீழ், பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது பெண் மாடல் ஒருவர் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டிம்பிள் பால் எனும் பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், சஜித் கான் தனது 17 வயதில் இருந்தே தன்னிடம் அத்துமீறி வருவதாகவும், தான் பாலிவுட்டை சாராத குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும், தனக்காக தானே பாலிவுட்டில் உழைத்து சம்பாதிக்க வேண்டிய தேவை இருந்ததாலும் இத்தனை நாள் தான் அமைதி காத்து வந்ததாகவும் டிம்பிள் பால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சஜித் கான் தன்னிடம் அத்துமீறிய சம்பவம் குறித்து தெரிவித்த அப்பெண், சஜித் கான் தன்னை ஆபாசமாகத் தொட முயன்றதாகவும், அவர் முன்னிலையில் தன்னை நிர்வாணமாகத் தோன்றும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயகம் இறக்கும் முன், பேச்சுரிமை மறுக்கப்படும் முன், தான் இதைக் கூறிவிட நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ‘Me Too’வின் கீழ், சஜித் கான் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

முன்னதாக, Me Too புகார்களைத் தொடர்ந்து சென்ற ஆண்டு வெளியான ‘ஹவுஸ் ஃபுல்’ படத்தின் நான்காம் பாகத்திலிருந்து சஜித் கான் விலகியது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here