Home சினிமா 'சினிமா மீது எனக்குள் மீண்டும் நம்பிக்கையை கொண்டு வந்தவர்' இவர் தான் - விஜய் சேதுபதி...

‘சினிமா மீது எனக்குள் மீண்டும் நம்பிக்கையை கொண்டு வந்தவர்’ இவர் தான் – விஜய் சேதுபதி !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் தற்போது விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் இந்த நிலையை அடைய கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை, அவர் கடந்து வந்த பாதையிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். சினிமாவிற்கு வரும் முன் பல அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களிலும், குறும் படங்களிலும் நடித்திருக்கிறார். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நேர்த்தியாக நடிக்கும் திறன் கொண்டவர். தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைக் கரு மற்றும் வேடங்களில் நடித்து ரசிகர்களின் அளப்பறியா அன்பை பெற்றிருப்பவர்.வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஹீரோவிற்கு இணையாக நடித்து அசரவைக்கும் ரகுவரன் போன்ற நடிகர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம். அண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தான், தனக்கு சினிமா மீது மீண்டும் நம்பிக்கையைக் கொண்டுவந்தவர் என்று கூறியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்தது பிட்சா திரைப்படம் மூலம் தான். கார்த்திக் சுப்புராஜின் முதல் திரைப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார். விஜய் சேதுபதியின் வெற்றி பாதைக்கு இத்திரைப்படம் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி, பேட்ட போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி, பிட்சா திரைப்படத்திற்கு முன்பே கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்களில் நான் நடித்திருக்கிறேன். அப்போதிலிருந்தே சினிமா மீது தான் இழந்த வந்த நம்பிக்கையை என்னுள் மீண்டும் கொண்டு வந்தவர். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், ஒளிப்பதிவாளர் சி.ஜே.பாஸ்கர் தான் தனக்கு கேமரா மீது உள்ள பயத்தை போக்கினார். கார்த்திக் சுப்பராஜ் உடன் இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் மணிகண்டன் ஆகியோரும் தன் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறியுள்ளார்.
Attachments area

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here