இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம்பிடத்தவர். இதையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.
கைதி திரைப்படம் தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது. இந்த படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர். முதல் படமான மாநகரம், பல்வேறு கதைகளை சிறிதளவு கூட குழப்பாமல் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் யாருடைய கதாபாத்திரத்தன் பெயரும் கூறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
கைதி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தமிழகத்தின் தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கூடுதல் சிறப்பம்சமாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி கலக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் கத்தி திரைப்படத்தில் விஜய்க்கு மாஸ் பிஜிஎம் வழங்கியிருந்தார். இதையடுத்து தற்போது இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்களான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் உள்ளது என்றால் அது மிகையல்ல. இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர் மூடப்பட்டதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
மேலும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் பரவிய நிலையில், படக்குழுவினர் ரசிகர்களை ஏமாற்றும்படி இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட மாட்டோம் என கூறியதாக தகவல்கள் வெளியாகின.
அதோடு தியேட்டர் திறந்தவுடன் இந்த படம் முதல்படமாக வெளியாகும் எனவும் அடுத்தாண்டு ஆரம்பத்தில் தான் இந்த படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்து சற்று ஆராய்ந்தால், மாஸ்டர் எனும் கொரியன் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டர்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.