Home சினிமா கிசு கிசு தடைகளை உடைப்பாரா மணி ரத்தினம்: வரலாற்று திரைப்படத்துக்கு தொடரும் சிக்கல்!

தடைகளை உடைப்பாரா மணி ரத்தினம்: வரலாற்று திரைப்படத்துக்கு தொடரும் சிக்கல்!

மணிரத்னம் இயக்கத்தில் ரூ.800 செலவில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். புத்தக ஈர்ப்பாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமைடந்த நாவல் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய இந்த நாவலின் அடிப்படையில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.

லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்த இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த வருடம் டிசம்பரில் தாய்லாந்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பிற்கு பிரமாண்ட ஷெட் போடப்பட்டது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியாவில் படப்பிடிப்பை நடத்தப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தமிழ் திரையுலக வட்டாரங்களில் ஒரு வதந்தி தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயன்ற பல இயக்குனர் தோல்வி அடைந்துள்ளனர். சென்டிமென்டாக இந்த படம் இயக்கமுடியாது. நடிகருக்கோ, இயக்கனருக்கோ, தயாரிப்பாளருக்கோ பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் உருவாக்கத்துக்கு நடுவில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த இயக்குனர் படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல்தான் காளி என படத்திற்கு டைட்டில் வைத்தால் உருவாக்கத்தில் சென்டிமென்டாக சிக்கல் ஏற்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது, அதற்கேற்ப காளி என முன்னதாக ஒரு படத்திற்கு டைட்டில் வைத்த போது அந்த படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் விஜய் ஆண்டனி இதை முறியடித்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

Ponni's Selvan stars Vikram, Karthi, Jayam Ravi, Amitabh Bachchanஇந்த படத்தில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரம் மகளாக நடித்த பேபி சாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சில்லுக்கருப்பட்டி படத்தில் இளமை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெண்ணாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ponni's Selvan stars Vikram, Karthi, Jayam Ravi, Amitabh Bachchan

கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என பிரித்து பார்க்கும் வகையில் சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு நிறைய பேர் கொண்டு படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Ponni's Selvan stars Vikram, Karthi, Jayam Ravi, Amitabh Bachchan

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தாமதம் காரணமாக மணிரத்தினம் சிறிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதை முற்றிலும் மறுத்த மணிரத்தினம் இந்த வரலாற்று படத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நடிக்க வேண்டியிருக்கும் எனவும் இருப்பினும் தொழில்நுட்ப விஷயங்களை பயன்படுத்தியாவது குறைந்த நபர்களை வைத்து படத்தை உருவாக்க முயற்சி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Ponni's Selvan stars Vikram, Karthi, Jayam Ravi, Amitabh Bachchan

பிரபலங்கள் பட்டாளேமே நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை கொரோனாவுக்கு மத்தியில் நடத்தி திரைப்படத்தை மணிரத்தினம் அடுத்த ஆண்டு வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here