சோத்த திண்ற யாரும் இங்க இருக்க மாட்டான்., முடியலடா சாமி நான் போறேன்:- இத இன்னிக்கு பிக்பாஸ்ல ஒருத்தர சொன்னாப்ல., வாங்க என்னா நடந்துச்சுனு பாக்கலாம்.
பிக்பாஸ் தினசரி நிகழ்வ சுருக்கமா நருக்குனு தெரிஞ்சக்கனுமா., சிம்பிள் இந்த வீடியோவ லைக் பண்ணுங்க, தூது சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க அப்டியே பெல்ல தட்டி விடுங்க
எப்பவும் போலவே அங்கிளுக்கும் அனிதாக்கும் சண்ட தொடங்கிட்டே இருக்கு. முழு சண்டக்கான காரணத்த நம்ம நேத்திக்கு எபிசோட்ல பாத்தோம். இன்னிக்கும் அதே சண்டதான் தொடருது
நம்ம அங்கிள்., நான் இனிமே குக் டீம்ல இருக்கமாட்டேன் என்ன பாத்ரூம் கழுவ கூட அனுப்புங்க நல்லா கழுவேன்., சோத்துல உப்பப்போட்டு திங்கிற எவனும் இங்க இருக்கமாட்டான் முடியலடா சாமி அப்டி இப்டினு கொந்தளிச்சு பேச ஆரம்பிச்சுட்டாப்ல நான் குக் டீம்ல இருந்து விழக இந்த அனிதா தான் காரணம்னு போட்டு உடைக்க அனிதா சடக் சடக் சடக்னு மூனு தடவ திரும்பி அங்கிள கண்ணு முழி விரிய பாக்க ஆரம்பிச்சாங்க
இந்த ஆளு பிக்பாஸ் ப்ரோமால வரனும்னு ஆசப்பட்டு என்னைய ட்ரிகர் பண்றாப்லனு அனிதா குறைய சொல்ல ஆரம்பிச்சாட்டாங்க… ட்ரிகர் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா., என்னங்க நீங்க இது நம்ம பிக்பாஸ் பேமஸ் வார்த்தைங்க இந்த வார்த்தை முதல்ல சொன்னவரு நம்ம இயக்குனர் பி.வாசு மகன் சக்திதாங்க
நம்மள பொருத்தவர இந்த சண்டக்கு காரணம்னு பாத்தா அனிதாதாங்க. சும்மா வம்புக்குனு சண்டபோட்றாங்க, நான் இப்டிதானு சும்மா சும்மா அனிதா சொல்றாங்க, அவரு., வயசுல மூத்தவரு அவருக்குனு ஒரு மருவாத எதிர்பாக்க மாட்டாப்லயா அதுலா கவனிக்கனுங்க
கொஞ்சம் சிரிக்கிற மாதிரியாவும் பிக்பாஸ் காமிச்சாப்ல ரேக்கா மாடம் தூங்கிட்டு இருந்தாங்க இத பாத்து சின்ன வைத்தெறிச்சல இருந்த மத்தவங்கலாம்.,, மத்தவங்கனா ரம்யாபாண்டியன், ஷனம் இவுங்கெல்லாம் சேந்து பிக்பாஸ் அந்த நாய குறைக்க சொல்லுங்க அவுங்க தூங்குறாங்கனு சொல்லி பாத்தாங்க.., பிக்பாஸு கேட்கல
இதுல காண்டான ரம்யாபாண்டியன் கூட இருந்தவுங்கெல்லா சேந்து அவுங்களே நாய் மாதிரி கத்துனாங்க.., திடீர்னு போர்வைய விழக்கி வெளில வந்த ரேக்கா மாடம் நல்லாவே இல்ல நாய் எப்படி குறைக்கும்னு தெரியுமானு செமயா குறைச்சு காமிச்சாங்க.., நாய் கத்துர மாதிரி அப்டியே இருந்துச்சு
அடுத்ததா குக் டீம்ல ஷனமுக்கும் பாலாக்கும் சண்ட ஆரம்பிச்சு., ரெண்டு பேரும் மாத்தி மாத்தி குத்தத்த சொல்லி வாக்குவாதத்துல ஈடுபட்டிக்கிட்டாங்க., என்னங்க நினச்சிங்க சுரேஷு என்ன குற சொல்லி குக் டீம்ல இருந்து வண்டிய கட்டிட்டாப்ல இப்போ நீங்க சண்ட போட்றீங்கனு ஷனம் பாலாவ பாத்து கத்த ஆரம்பிச்சாங்க., இத பாத்த நம்ம அங்கிளு பாஸூ சூப்பரா கொழுத்தி போட்ட டப்பாஸூ அப்டினு சொல்ல இன்னக்கு ஷோவ முடிச்சுக்கிட்டாங்க