பிறந்த நாளில் பிறந்த மேனியாக பதிவிட்ட நடிகர்!
மும்பை: பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ஆடையின்றி பீச்சில் ஓடும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
பிரபல மாடலும் பாலிவுட் நடிகருமான மிலிந்த் சோமன் இன்று (நவ. 04) தனது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அதற்காக அவர் தனது மனைவி அங்கிதா கொன்வருடன் கோவா சென்றுள்ளார்.
இதற்கிடையில் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், கோவா கடற்கரையில் ஆடைகளின்றி ஓடும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அத்துடன் தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை அவரது மனைவியும் பகிர்ந்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தற்போது அப்புகைப்படம் வைரலாகிவருகிறது.