Home சினிமா விமர்சனம் இதற்காக பல விதிகளை மீறியிருக்கிறேன் - சமந்தா ஓபன் டாக்...!

இதற்காக பல விதிகளை மீறியிருக்கிறேன் – சமந்தா ஓபன் டாக்…!

‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 தொடரில் பல விதிகளை உடைத்திருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

அமேசான் ப்ரைமில் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஒளிபரப்பான தி ஃபேமிலி மேன் முதல் சீசனில் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியாமணி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர், 10 பகுதிகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்தி மொழியில் வெளியான இத்தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார்.

முதல் சீசனில், ஷரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் மற்றும் குல் பனாக் ஆகியோரும் நடித்திருந்தனர். இயக்குநர்கள் ராஜ் நிடிமோரு – கிருஷ்ணா டி.கே ஆகியோர் இயக்கிய இந்தத் தொடர், தேசியப் புலனாய்வு அமைப்பில் ரகசியமாகப் பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனைப் பற்றிய கதையாகும்.

முன்னதாக இத்தொடரின் இரண்டாவது சீசனின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவுபெற்றது. இதன் இறுதிக்கட்ட பணிகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில், “விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓடிடி எங்களுக்குத் தருகிறது. தி ஃபேமிலி மேன் தொடரில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். பல புதிய விஷயங்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன்.

samantha.akkineni have broken lots of rules in the family man 2

இந்த சீஸனில் நடித்ததிலும் அதன் இறுதி வடிவத்தைப் பார்த்ததிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல ஆச்சரியமாக இருக்கும்.

ஓடிடி ஒவ்வொரு கலைஞருக்கும் புதிய சாத்தியங்கள் நிறைந்த உலகத்தை அறிமுகம் செய்துள்ளது. திரைப்படங்கள் என்று வரும்போது ஒரு நடிகர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான குறிப்பிட்ட வகையான கதாபாத்திரங்களிலேயே நடிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஓடிடியில் பரிசோதனைகள் செய்து பார்க்க முடியும்” என்றார்.

திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு சமந்தா கூறியதாவது, ”திரைத்துறைக்கு நான் வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வந்த காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் மிகப்பெரிய அளிவில் மாற்றங்கள் நடந்துள்ளன.

உலக சினிமா அறிமுகம், ஓடிடி தளங்களில் வருகை எனப் பெண்களுக்கான வாய்ப்புகளும் தேர்வுகளும் நிலையாக அதிகரித்து வருகின்றன. முன்னைப் போல ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் எங்களை நடிக்க அழைப்பதில்லை” என்றார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here