இறுதிச் சுற்று இயக்குநரான சுதா கொங்கரா தான் சூரரைப் போற்று படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஒரு விமான நிறுவனத்தை உருவாக்கியவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக சொந்தமாக ஒரு விமானத்தை சில நாட்கள் வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இதில் அந்த விமானியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார், கதாநாயகியாக அபர்ணா பாளமுரளி நடித்துள்ளார்.
சுதா கொங்கரா என்றாலே எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் கூடுதலாகவே இருக்கும். ஏனெனில் இறுதிச் சுற்று படத்தின் வெற்றியே அதற்குக் காரணம். சூரரைப் போற்றுத் திரைப்படத்தில் ஊர்வசி,கருணாஸ், ஜாக்கி ஷெராப், , மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமானத்தை மையமாகக் கொண்டுள்ள கதை என்பதால் இசை வெளியீட்டையும் வித்தியாசமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதன் படி விமானத்தில் இந்த திரைப்படத்தின் பாடலான வெய்யோன் சிலி வெளியிடப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அட்டகாசமாக வந்துள்ள இந்த பாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் அகரம் ஃப்வுண்டேஷன் மூலம் 100 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முதல் முறையாக பயணித்தனர்.
இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.