திருவனந்தபுரம்: அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின், வாழை இலை ஆடைப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன், ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் அனிகா தல அஜித்திற்கு மகளாக நடித்தார். அடுத்து ‘மா’ குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். மீண்டும் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா – அஜித்திற்கு மகளாக நடித்து தென்னிந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் மிகையில்லை.

தற்போது, 14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து, தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்துவருகிறார். அப்படி இவரின் போட்டோ ஷுட்கள் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் உள்ளது. அந்தவகையில், தற்போது நடத்தியுள்ள போட்டோ ஷூட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அப்படி என்ன போட்டோ ஷுட்டுனு யோசிக்கிறேங்களா..! நாம் சாப்பிடும் வாழையிலையில் ஆடையை அலங்கரித்து அணிந்துள்ளார். இதை பல ரசிகர்கள் பாராடியும், விமர்சித்தும்வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர், ‘இயற்கையோடு இயந்தி வாழும் அனிகா’ என்றும், மற்றொரு ரசிகர் ‘வாழை இலையை மாடு சாப்பிடாம பார்த்துகோங்க’ எனக் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இது போன்று வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து நடிகைகள் போட்டோ ஷுட் நடத்திவருகின்றனர். அப்படி சமீபத்தில் தமன்னா தலையணையை ஆடையாக அணிந்த புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.