Home சினிமா குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ல் படம் எப்படி இருக்கு?

குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ல் படம் எப்படி இருக்கு?

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ல் படத்தின் விமர்சனத்தை குறித்து தற்போது பார்க்கலாம்.

1999 கார்கில் போரில் இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக இருந்தவர் குஞ்சன் சக்சேனா. போரின் போது நாட்டிற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியதால் இவரை கார்கில் கேர்ல் என்றே அழைக்கப்பட்டார்.

இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ல். சரண் சர்மா இயக்கத்தில் கரண் ஜோகர் இன் தர்ம புரோடக்சன்ஸ் மற்றும் வி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குஞ்சன் சக்சேனா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது தந்தையாக பங்கஷ் திரிபாதி நடித்துள்ளார். இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகியது.

oo much of cinematic scene let down the Kunjan Saxena The Kargil Girl biopic

ராணுவ குடும்பத்தில் பிறந்தவர் குஞ்சன் சக்சேனா. இவரது தந்தை லெப்டினென்ட் கர்னல் (ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி) அசோக் குமார் சக்சேனா மற்றும் அவரது சகோதரர் இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றினர்.

இதனால் சிறுவயதிலேயே தான் விமானியாக சேர வேண்டும் என்ற கனவோடு வளர்கிறார் குஞ்சன் சக்சேனா. லக்னோவைச் சேர்ந்த இவர், தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு விமானி ஆவதற்கான பயிற்சி வகுப்பில் சேர முயற்சிக்கிறார். ஆனால் அதற்கு பத்து லட்ச ரூபாய் செலவாகும் என்பதால் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்.

அடுத்த நாளே இந்திய விமானப் படையில் பெண்களை சேர்ப்பதாக வரும் விளம்பரத்தை தனது தந்தை குஞ்சன் சக்சேனாவிடம் காட்டுகிறார். அதன்பிறகு 25 பெண்கள் இந்திய ராணுவ குழுவில் சேர்க்கப்பட்டதில் குஞ்சனும் ஒருவர்.

இந்திய இராணுவ குழுவில் முதல் பெண்கள் படை அதுவே ஆகும். இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக திகழ்ந்த இவர், பயிற்சியின்போதுசந்தித்த பாலினப் பிரச்னைகள் என்ன என்பதும் அதன் பிறகு எப்படி கார்கில் கேர்ல் என்ற பெயரை பெற்றார் என்பதுமே கதையாகும்.

குஞ்சன் சக்சேனாவாக ஜான்வி கபூர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முயற்சித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு சில இடத்தில் அவரது நடிப்பு அப்பட்டமாக தெரிகிறது.
மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும் சரண் சர்மா, நிக்கில் மெல்ஹொத்ராவின் வசனங்களும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும் குஞ்சன் சக்சேனாவின் தந்தையாக வரும் பங்கஷ் திரிபாதி தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

112 நிமிடங்களில் குஞ்சன் சக்சேனா பெண் விமானியாக சந்தித்த பாலின வேறுபாடுகளை இயக்குநர் சற்று அளவுக்கு அதிகமாகவே காட்டியுள்ளது சர்ச்சையாகியுள்ளது

இந்திய விமானப் படையில் பாலின பேதம் இருப்பதாக வரும் காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என்று இந்திய விமானப் படை மத்திய அரசின் தணிக்கைக் குழுவுக்கு கடிதம் எழுதியது. இருப்பினும் வெளியாகியுள்ளதால் படத்தின் எந்த ஒரு காட்சியிலும் நீக்கப்படாமல் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சர்ச்சைகளான விஷயத்தை தவிர்த்து யார் இந்த குஞ்சன் சக்சேனா என்ற எதிர்பார்ப்போடு படத்தை பார்த்தால் உங்களுக்கு படம் பிடிக்கலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here