Home சினிமா தியேட்டர் இல்லைனாலும்...சீட்டின் நுனியில் லாக் பண்ணும் 'லாக்அப்' படத்தின் திரை கண்ணோட்டம்...!

தியேட்டர் இல்லைனாலும்…சீட்டின் நுனியில் லாக் பண்ணும் ‘லாக்அப்’ படத்தின் திரை கண்ணோட்டம்…!

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் நான்கு மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். அப்படி ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வந்தன.

இந்நிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் இன்று (ஆக.14) இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார்.

துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப். கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடன் உள்ளது. வைபாவ்வும், வெங்கட் பிரபுவும் காவல் துறை அதிகாரிகளாகவருகிறார்கள். பல சுவாரஸ்யங்களுடன் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

லாக்அப் என பெயர் இருப்பதால், சாத்தான்குளம் சம்பவம் போன்று லாக்அப் மரணத்தை பற்றி பேசப்போகிறது என்றால் உங்களுக்கு ஏமாற்றமே…!
லாக்அப்பில் பெரிய சம்பவம் எதுவுமே நடைபெறாத போது படத்திற்கு எதற்கு லாக்அப் எனப் பெயர் வைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

சென்னை, நீலாங்கரை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மைம் கோபி ஒரு பங்களாவில் கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கு சம்பந்தமான முக்கிய தடயங்களை சேகரிக்க வேறு ஸ்டேஷனைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டரான ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்தப் பகுதி ரவுடி ஒருவர் அந்த கொலையை செய்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து விசாரணையை ஆரம்பிக்கிறார் ஈஸ்வரி. அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபுவுக்கு இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை. சாதாரண காவலராக வேலை பார்க்கும் வைபவ்வுக்கு சப்-இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற ஆசை. கூடவே, அப்பகுதியைச் சேர்ந்த வேலைக்காரப் பெண் பூர்ணா மரணமும் இன்ஸ்பெக்டர் கொலையுடன் சம்பந்தப்பட்டுவருகிறது.

விசாரணையின் போது வெங்கட்பிரபுவுக்கும் இன்ஸ்பெக்டர் மைம் கோபி கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக ஈஸ்வரி கண்டுபிடிக்கிறார். அதன்பின் என்ன? என்பதுதான் மீதி கதை.

முதலில் சொன்னது போன்று கதை விறுவிறுப்பாக போகும் என்பதால், தியேட்டரில் படத்தின் பாதியில் தூங்க முடியாது. படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது கதை, கடைசிவரை நம்மை சாயா விடாத அளவுக்கு பரப்பரப்பாக நகர்கிறது.

இருந்தபோதிலும் சில இடங்களில் சொதப்பல். அதில் சப்-இன்ஸ்பெக்டரின் பிளட் குரூப் என்ன என்பது குறித்து தெரியா? சோதனை தேவை என்பதுபோல் இருந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் நாயகன் என்று சொன்னால் வெங்கட் பிரபுதான், நாயகி என்று சொன்னால் ஈஸ்வரி ராவ்தான். இவர்கள் இருவரும்தான் படத்தில் அதிக காட்சிகளில் வருகிறார்கள்.

ஈஸ்வரி ராவ் ஆரம்பக் காட்சியிலேயே அவரை நேர்மையான ஒரு இன்ஸ்பெக்டராகப் பார்க்க வைத்துவிடுகிறார். வெங்கட் பிரபு, வைபவ் மற்ற போலீசாரை அவர் டீல் செய்யும் கம்பீரமே தனி. அடடா, இப்படி ஒரு நடிகையை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் வருகிறது.
அதிலும் வெங்கட் பிரபுவின் ஆக்டிங் அல்டி என்றே சொல்லலாம். ஒரு அசால்டான நடிப்பாக இருந்தது.

எந்தக் கதாபாத்திரம் கிடைச்சாலும் அதுக்கேத்தபடி தன்னை மாத்திக்கற ஒரு நடிகரா வைபவ் இருக்கிறாரு. அவருக்கான சரியான படமா, கதாபாத்திரமா இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு.
ஏழை வேலைக்காரப் பெண்ணாகப் பூர்ணா. வைபவ் காதலியா வாணிபோஜன் தங்களது கதாப்பாத்திரத்தை பண்ணிருக்காங்க.
சில காட்சிகளில் மட்டுமே அரோல் கொரேலியின் பின்னணி இசை, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு, ஆனந்த் ஜெரால்டின் ஒளிப்பதிவு லாக்அப் படத்திற்குள் நம்மை லாக் செய்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here