Home சினிமா சர்வதேச மார்க்கெட்டை குறி வைக்கும் விஜய் சேதுபதியின் 'லாபம்' டிரைலர்...!

சர்வதேச மார்க்கெட்டை குறி வைக்கும் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ டிரைலர்…!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் கதைகளமாக வைத்து உருவாகியுள்ளது ‘லாபம்’ திரைப்படம்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களுக்குப் பிறகு எஸ். பி. ஜனநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் பிரதான கதாபாத்திரத்தில் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார். நடிகை தன்ஷிகா, ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன், ரமேஷ் திலக், இயக்குநர் மாரிமுத்து, டேனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்துக்கு இசை – டி. இமான். ஒளிப்பதிவு – ராம்ஜி. தயாரிப்பு – 7சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் பி. ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன் சார்பில் விஜய் சேதுபதி.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படம், தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து படத்தை ஊரடங்கு முடிவுக்கு வந்து பின்பு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் டிராக் பாடல், படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் விவசாயிகள் கூட்டம் நடைபெறுவது போல் இடம்பெறும் ஒரு காட்சிக்காக செட் போடாமல், நிஜமாகவே கட்டடம் ஒன்று கட்டப்பட்டு காட்சி எடுத்த பின்னர், அந்தக் கட்டடம் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக திகழும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் நலிவையும், விவசாயிகள் தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலையும் ‘லாபம்’ படம் பேசும் என்று படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் 2 நிமிடம் 47 விநாடிகள் ஓடும் இப்படத்தின் ட்ரெய்லரின் தொடக்கம் முதல் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் அனல் தெரிக்கும் விதமான வசனங்களும், காட்சிகளும் இடம்பிடித்துள்ளன

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here