கோவிட் 19 எனப்படும் கண்ணிற்குப் புலப்படாத கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை பலி கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரே வலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையவர்கள் இந்த நோய் தொற்றுக்கு பலியாவதில்லை. உலக சுகாதார அமைப்பும் இதையே வலியுறுத்தி வருகிறது. இந்த பதிவில் கொரோனாவை எதிர்கொள்ளும் மூன்று மாற்று மருந்துகள் பற்றி பார்க்கலாம்.
கபசர குடிநீர்
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று கபசர குடிநீர். இது நியோமோனியா நோயாளிகளுக்கும் அறிவுறுத்தப்படும் ஒரு மருந்து. இதில் 15 வகையான மூலிகைகள் இடம்பெற்றிருக்கின்றன. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றை குறைக்கும் ஆற்றல் இந்த மருந்திற்கு உள்ளது. சித்த மருந்து கடைகளில் வாங்கி 1 ஸ்பூன் பொடி 1 டம்பளர் நீரில் நன்கு காய்ச்சி கால் டம்பளர் வரும் வரை வத்தவிடவும். காலை வெறும் வயிற்றில் ஒரு நேரமும் மாலை வேலையில் 1 நேரமும் உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி தானாக அதிகரிக்கும். மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரையின் படி தமிழகத்தில் இந்த குடிநீர் வழங்கப்படுகிறது. நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மற்றும் மருத்துவமணைகளில் உள்ள நோயாளிகளுக்கு தினசரி அடிப்படையில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆர்சனிக் ஆல்பம் 30
ஹோமியாபதி மருந்துகளில் ஒன்றான ஆரசனிக் ஆல்பம் 30 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதுவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்து பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் உட்கொள்ளலாம். இந்த மாத்திரையை தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை வேலையில் மூன்று மாத்திரைகள் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் வாரத்திற்கு ஒரு முறை இதனை உட்கொண்டால் போதுமானது. இந்த மருந்தால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று ஹோமியோபதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இம்ப்ரோ
சித்த மருந்துகளில் ஒன்றுதான் இம்ப்ரோ. இதில் 66 மூலிகைகள் இடம்பெற்றிருக்கிறது. இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு வகையான பொடி. இதனை மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவர் தயாரித்துள்ளார். இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தமிழக அரசு இந்த மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கூடிய விரைவில் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
இவை அனைத்தும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடக் கூடிய சக்தியை நமது உடலில் உருவாக்கும் வல்லமை பெற்றவை. இது போன்ற மருந்துகளை தினமும் உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி ஒருவரால் எளிதில் கொரோனாவை வெல்ல இயலும்.