Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் ரசாயனம் எதற்கு பழங்கள் இருக்கே: சருமம் பளபளவென மின்ன வேண்டுமா., இதோ டிப்ஸ்!

ரசாயனம் எதற்கு பழங்கள் இருக்கே: சருமம் பளபளவென மின்ன வேண்டுமா., இதோ டிப்ஸ்!

உங்கள் சருமத்தை பராமரிப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறீர்களா? அப்படியென்றால் ரசாயனம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை தவிர்த்து இயற்கை முறையை நாடுங்கள். சருமம் பொறுத்த வரையில் நீங்கள் எப்போதும் பழங்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மட்டுமல்லாது, உங்கள் சருமத்திற்கு நீங்கள் தேடும் அழகையும் கொடுக்கும் வல்லமை பெற்றது. உங்கள் முகப்பருவை அகற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்வதில் இருந்து அனைத்து சரும பிரச்னைகளுக்கும் பழங்கள் சிறந்த நன்மையை பயக்கும். அப்படிப்பட்ட பழ வகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்ச், எலுமிச்சை,திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம் எந்த அளவோ, அதே போல் அந்த பழங்களின் தோலை சருமத்தில் பயன்படுத்துவதும் சிறந்த பலனை தரும். முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளை அகற்றுவது மற்றும் சருமத்தை பொழிவுடன் வைத்துக் கொள்ள இந்த வகை பழங்களை பயன்படுத்தலாம். வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் வயது முதிர்தலை குறைப்பது மட்டுமின்றி சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அதன் சிட்ரிக் அமிலம் கொண்டு அகற்றும் வல்லமையும் பெற்றது. இதன் நன்மைகளை அடைய வேண்டும் எனில், உங்களுக்கு பிடித்த சிட்ரஸ் பழம் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறு துண்டை வெட்டி முகத்தில் தடவவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவினால் பொழிவான அழகிய சருமத்தை காணலாம்.

கொய்யா சரும குறிப்புகள்

வைட்டமின் சி, பொடாச்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் நிறைந்த பழம் கொய்யா. உங்கள் சருமத்தை வெளிப்புற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். மேலும் சரும சுறுக்கங்களை அகற்றி வயதானலும் இளமையுடன் காண உதவி புரியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கொய்யா பழத்தின் விதைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொண்டு, அதன் பின் அதனை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் களித்து கழுவினால் மிளிரும் சருமத்தை காணலாம்.

தக்காளி

உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கரு வளையங்களை அகற்றுவதற்கான வழிகளைப் பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், தக்காளி தான் அதற்கு சிறந்த பழம். பொட்டாசியம் மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைந்த இந்த பழம் உங்கள் சருமத்தில் உள்ள செல்கள் வளர உதவுகிறது மற்றும் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை அளிக்கும் திறன் கொண்டது. தக்காளியை சில துண்டுகளாக வெட்டி, உங்கள் கண் பகுதிக்கு கீழே மசாஜ் செய்யவும். இது உங்கள் கண்களை குளிர்ச்சியடை செய்வது மட்டுமின்றி கரு வளையங்களை முழுவதுமாக அகற்றவுதற்கும் உதவும்.

பெர்ரீஸ்

நீங்கள் ஸ்ட்ராபெர்ரி அல்லது கிரான்பெர்ரி எதை விரும்பினாலும் பயணப்படுத்தலாம். பெரும்பாலும் பெர்ரி வகை பழங்கள் பல நன்மைகளை பயக்கும். இது சருமத்தில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி கதிரியக்க சருமத்தை உங்களுக்கு தரும். இதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பழத்தை நன்கு பிசைந்து முகத்தில் தடவலாம் அல்லது சிறிய துண்டுகளாக வெட்டி முகத்தின் மேல் வைக்கலாம். இந்த பழங்கள் இயற்கையாகவே மென்மையான முறையில் இருப்பதால், இரு வழிகளையும் பயன்படுத்துவது பாதுக்காப்பானது.

கிவி

வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்த கிவி உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றுவதோடு வெளிப்புற அசுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. அதைப் பயன்படுத்த, பழத் தோலை அகற்றி விட்டு உள்ளிருக்கும் சக்கையை ஆலிவ் எண்ணெயுடன் நன்கு கலக்க வேண்டும். அதன் பின்னர் உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவினால் உங்கள் சருமம் பளபளப்புடன் காணப்படும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here