ராணா டகுபதியின் மனைவி மிஹீகா பஜாஜின் பிரமிக்க வைக்கும் திருமண லெஹெங்கா வடிவமைக்க 10,000 மணிநேரங்கள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. இவருக்கும் பிரபலத் தொழிலதிபரின் மகள் மிஹீகா பஜாஜ்ஜிற்கும் கடந்த மாதம் 8 ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.கரோனா லாக்டவுன் காரணத்தால் இத்திருமணத்தில் 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
டோலிவுட் பிரபலங்களான வெங்கடேஷ், சமந்தா, ராம்சரண் உள்ளிட்டட பலரும் பங்ககேற்றனர். ராணா – மஹீகா திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதில் ராணா மனைவி அணிந்திருந்த லெஹன்கா மீதுதான் அனைவரது கண்ணும் இருந்தது. கைகளாலே சர்தோசி, தங்க ஜரிகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட அந்த லெஹன்காவில் மிஹீகா பேரழகியாக தெரிந்தார்.
இந்த நிலையில் இந்த இந்த ஆடை கைகளாலே வடிவமைக்கப்பட்ட தாகவும் அதற்கு 10,000 மணி நேரம் ஆனதாகவும் தெரியவந்துள்ளது. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கன்னா வடிவமைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மிஹீகாவிற்கும் அவரது தயார் பன்டி பஜாஜ்ஜிற்கும் ஆடை வடிவமைப்பில் நல்ல ரசனை இருந்தது. அதனால் அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே அந்த லெஹன்கா முழுவதும் கைகளாலே சர்தோசி, தங்க ஜரிகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அவர்களின் பத்தாயிரம் மணிநேர உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்ட லெஹன்கா பிரம்மாண்டமான முறையில் வந்துள்ளது என்றார்.
மேலும் அந்த லெஹன்காவிற்கு அவர் அணிந்திருந்த துப்பட்டாவும் தங்கத்தால் நெய்யப்பட்டது.லெஹன்காவோடு மிஹீகா பாரம்பரிய போல்கி, வைரம் மற்றும் மரகத நகைகளையும் அணிந்திருந்தார்.