Home லைப்ஸ்டைல் மருத்துவம் கரோனாவை எதிர்க்கொள்ள நம்மூரு பாட்டிவைத்தியம் இதோ...!

கரோனாவை எதிர்க்கொள்ள நம்மூரு பாட்டிவைத்தியம் இதோ…!

கரோனாவை எதிர்க்கொள்ள தேவையான ஊட்டச்சத்தைப் பெற நமது பாட்டி வைத்தியத்திலிருந்து சிலவை…!

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.3 மில்லியனை தாண்டியுள்ளது.

இருந்தபோதிலும், வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன.
இது ஒரு புறம் இருக்க கரோனா தொற்றுக்கான தடுப்பூசி, மருந்துகள் கண்டுபிடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருமுன் காப்போம் என்பதற்கிணங்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆகாரங்களை உண்ண, பருக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் சுஜாதா ஸ்டீபன் விளக்குகிறார்.

காலை:

அதிகாலையில் சூடான கொதிக்கும் நீரில் துளசி, மிளகு, இலவங்கப்பட்டை, இஞ்சி, வெல்லம், மஞ்சள் சேர்த்து குடிக்க வேண்டும். வழக்கமான தேநீருக்கு பதிலாக இந்த சாற்றை குடித்தால், இருமல், சளி, தொண்டையில் அரிப்பு ஆகியவற்றிலிருந்து குணப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட மூலிகை தண்ணீரை குடித்து, சுமார் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த நேரத்தில், போதுமான சூரிய ஒளி உடலால் உறிஞ்சப்படுவதைக் கவனிக்க வேண்டும். யோகா செய்வதும், நடப்பது உடலுக்கு நல்லது.

தினமும் காலை 8 மணிக்குள் காலை உணவை முடிக்க வேண்டும். உளுந்து அல்லது ராகி மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இட்லிகளை காலை உணவுக்கு எடுத்துக்கொள்ள ஏற்றது. அரைத்த கேரட், முளைக் கட்டிய தானியங்களைச் சேர்ந்து உண்ணலாம்.

காலை 10.30 மணிக்கு, இந்த பருவத்திற்கு உண்டான பழங்களான பப்பாளி, மாதுளை, புளூபெர்ரி போன்றவற்றை உண்ணலாம்.

மதியம்:

மதிய உணவிற்கு, கீரைகள், பருப்பு வகைகள், புடலங்காய், சுண்டைக்காய், முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் என சத்தான் காய்கறிகளை சாப்பிடலாம்.
சராசரியாக ஒரு மனிதன் 150-200 கிராம் சிக்கன், 75 கிராம் மட்டன், 100 கிராம் மீன், 50 கிராம் பன்னீர் என அசைவம் உண்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு பதிலாக தினை, கடலை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாலையில் உலர் பழங்களை திண்பண்டங்களாகவும், காய்கறி சூப்பை பனாமாகவும் எடுத்து கொள்ளலாம்.

இரவு

இரவில் 7.30 – 8.00 மணிக்கு முன் இரவு உணவைச் சாப்பிடவேண்டும். தானிய வகையில் ரொட்டி செய்து எடுத்துக் கொள்ளலாம். தூங்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கப் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை விட்டு பருகினால் இன்னும் உடலுக்கு நல்லது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here