Home லைப்ஸ்டைல் மருத்துவம் 2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்!

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்!

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்!

இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து இச்செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பதால், மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணியை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்த பொதுமக்கள், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா தடுப்பூசிக்கான பயனாளர்களை விரிவுப்படுத்தியதாலும், மக்கள் மத்தியில் நிலவிய தயக்கம் குறைந்ததாலும், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லாததால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசிக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவமனைகள் அறிவித்திருந்தாலும், பலர் இரண்டாம் டோஸை குறிப்பிட்ட தேதியில் போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

What Happens If You Skip a 2nd COVID-19 Vaccine Dose?
What Happens If You Skip a 2nd COVID-19 Vaccine Dose?

இந்தநிலையில், இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கிய வைராலஜிஸ்ட் மருத்துவர் ஜேக்கப் ஜான், “தடுப்பூசிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. நாம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமான அம்மைக்கான தடுப்பூசி, நேரடி வைரஸ் தடுப்பூசியாகும். இது பலவீனமான வைரஸை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

ஆனால், கொரோனாவுக்கு தொற்று இல்லாத, பிரதிபலிக்காத வகை தடுப்பூசிகளே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு டோஸ்கள் தேவைப்படுகிறது. முதல் டோஸ் நமது உடலை தயார்படுத்தும். இரண்டாவது டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்

இரண்டாவது டோஸை போட்டுக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் பாதுகாக்கப்படவில்லை என்று அர்த்தம். அதாவது, இரண்டாவது டோஸை போட்டுக் கொள்ளாதவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம், அது கடுமையானதாகக் கூட இருக்கலாம், என்று கூறினார்.

மேலும், இதுதொடர்பாக பேசிய மருத்துவர் கே.பி.அரவிந்தன், “இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாமல் இருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸை போட்டுக் கொள்ளவில்லை என்றால், அது தடுப்பூசியின் செயல்திறனை சிறிது பாதிக்கலாம். ஆனால் இதை நிரூபிக்க தரவுகள் இல்லை. இது தொடர்பாக ஆய்வுகள் தேவை”, என்றார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

Amma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்!

இது அந்த காலம் இல்ல., 2021: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்! சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்துக்குள் புகுந்து திமுக உறுப்பினர்கள்...

ஸ்தம்பிக்க வைத்த தம்பிகள்., 6.85% வாக்கு சதவீதம் பெற்று 3வது இடம்: தமிழக அரசியலில் தடம் பதித்த நாம் தமிழர் கட்சி!

தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக 6.85% வாக்குகளை பெற்று, நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி...

மு.க.ஸ்டாலின் எனும் நான்: அமோக வெற்றியில் திமுக., 2021 தேர்தலில் வரலாறு படைத்த வேட்பாளர் யார்?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த...

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்!

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட மறந்துட்டீங்களா? பக்கவிளைவுகள் ஏற்படுமா., விளக்கும் மருத்துவர்கள்! இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து இச்செய்தியில் விரிவாக பார்க்கலாம். நாடு முழுவதும்...

Related News

இது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை!

இது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை! கொரோனா தொற்று நோய் நாடுமுழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத அளவிற்கு கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. முன்னதாக...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here