Home சுற்றுலா & உணவு உணவு சர்க்கரை நோய் உள்ளதா? கவலை வேண்டாம் - வீட்டிலேயே தயாரித்து உண்ணக் கூடிய மாற்று இனிப்பு...

சர்க்கரை நோய் உள்ளதா? கவலை வேண்டாம் – வீட்டிலேயே தயாரித்து உண்ணக் கூடிய மாற்று இனிப்பு பண்டங்கள் !

நல்ல உணவு உண்ட பின் மனம் இனிப்பைத் தேடுவது என்பது இயல்பான ஒன்றுதான். இனிப்பை சுவைக்காமல் யாராவது இருக்க முடியுமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றாலே துள்ளிக் குதித்து ஓடி வருவது வழக்கம். ஆனால் இதில் சேர்க்கப்படும் இனிப்பானது சர்க்கரை நோயாளிகளுக்கு விளைவை ஏற்படுத்தக் கூடியது. மேலும் எடை குறைக்க விருப்பம் உள்ளவர்களும் இனிப்பு தின்பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆகையால் ஆரோக்கியமான சுவைமிக்க மாற்று இனிப்பு தின்பண்டங்களை செய்வது பற்றி கீழே உள்ள குறிப்புகளில் பார்க்கலாம்.

பர்ஃபி

உலர்ந்த பழங்கள், நட்ஸ் மற்றும் பேரிச்சை பழம் ஆகியவற்றைக் கொண்டு பர்ஃபியை எளிதில் செய்து விடலாம். இந்த ஆரோக்கியமான இனிப்பு பண்டத்தை வீட்டிலேயே தயாரித்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் உள்ள இரும்புச் சத்து, நார்ச் சத்து, ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் ஆரோக்கியம் மற்றும் சுவையை நமக்குத் தருகிறது.

செயல்முறை

1 ½ கப் விதையில்லா பேரிச்சை பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும், விதை இருந்தால் அதை நிச்சயம் அகற்றிவிட வேண்டும். அதன்பின்னர் இதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கிடையில், அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு அதில் 2 தேக்கரண்டி நெய் ஊற்ற வேண்டும். மேலும் அதனுடன் 2 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து, நன்கு வறுக்கவும். அடுத்ததாக ½ கப் அரைத்து வைத்த தேங்காய், ½ கப் பாதம் (தண்ணீரில் ஊறவைத்தது) , ½ கப் பிஸ்தா, ½ கப் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்க்கவும். இந்த நட்ஸ் வகைகளை சிறிய துண்டுகளாக உடைத்து வதக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியாக, தயாரிக்கப்பட்டுள்ள பேரிச்சை கலவையை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இது நன்கு இறுகிய பின்னர். அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, சிறிது நேரம் ஆற விடவும். அதன் பின் நமக்கு தேவையான வடிவங்களில் வெட்டி எடுத்து உண்ணலாம்.

சக்கரவல்லி கிழங்கு லட்டு

இதுவும் ஒரு வகையான சுவைமிக்க மாற்று இனிப்பு தின்பண்டம். இது இனிப்பு பிரியர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும். உணவுக்கு பின் ஒரு லட்டு சாப்பிட்டாலே போதும் திருப்திகரமாக இருக்கும்.

செயல்முறை

இதற்கு முதலில் 3 சக்கரவல்லி கிழங்குகளை வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் தோலை உரித்து நன்கு பிசைந்து பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும்.

இதற்கிடையில், ஒரு பானில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து, 1 கப் மக்கன்களை சேர்த்து நன்கு வறுக்கவும். அவை பொன்னிறமாக மாறும் வரை சிம்மில் வைத்தே வதக்க வேண்டும். அதன் பின் வதக்கியதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, மற்றொரு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 தேக்கரண்டி நெய், முந்திரி கொட்டைகள் 1/4 கப், பாதாம் மற்றும் திராட்சை1/4 கப், உலர்ந்த பழங்கள் 1/4 கப் (நட்ஸ் வகைகளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்) ஆகியவற்றை சிம்மில் வைத்தபடியே நன்கு வறுக்க வேண்டும். இந்த கலவை பொன்னிறமாக மாறியதும், சக்கரவல்லி கிழங்கு பேஸ்டை சேர்த்து, 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஊற்றி, இறுகும் வரை சமைக்கவும். கடைசியாக அதனை எடுத்து சிறிய லட்டுக்களாக உருட்டி உண்டு மகிழலாம்.

ஆப்பிள் ரப்டி

நீங்கள் எப்போதும் எடையில் கவனம் செலுத்தும் ஆளாக இருந்தால் ரப்டி எனும் பாலாடை அதிகம் சார்ந்த உணவு தொலைத்தூர கனவாக இருக்கலாம். ஆனால் வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான ரப்டி முறை கீழே கூறப்பட்டுள்ளது.

செயல்முறை

ஆழமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்தபடியே 1 லிட்டர் பால் சேர்க்கவும். பின்னர் அது கொதித்து அரை லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். பாத்திரத்தின் கீழே ஒட்டாமல் இருக்க பால் கொதிக்கும் நேரம் முழுவதும் கிளறிக் கொண்டே இருப்பது நல்லது. அதன்பின்னர் 3 ஆப்பிள்களை எடுத்துக் கொண்டு தோல் சீவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பில் பேஸ்டையும் முன்னதாக காயச்சி வைத்திருந்த பாலுடன் சேர்க்க வேண்டும். பின்னர் இனிப்பு சுவைக்காக அரைத்த 5 பேரிச்சை பழங்களின் பேஸ்ட், 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து நன்கு இறுகும் வரை சமைக்கவும். பின்னர் எடுத்து ப்ரிட்ஜில் வைத்து உண்ணலாம்.

அத்தி மற்றும் உலர் பழ லட்டு

அத்திப்பழங்களில் ஊட்டச்சத்துக்களும் மற்றும் நார்சத்து அதிகம் உள்ளது. இந்த அத்தி மற்றும் உலர் பழ லட்டுவை தயாரிப்பது மிகவும் எளிது

செயல்முறை

1 ½ கப் நறுக்கிய அத்திப் பழம். பின்னர் ஒரு கடாயை எடுத்துக் கொண்டு மிதமான சூட்டில் வைத்து 2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும். நெய் போதுமான சூடு வந்த பின்னர் அத்திப்பழத்துடன் 2 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். அதற்கு பிறகு 1 கப் ஊறவைத்து நறுக்கிய பாதாம் மற்றும் ½ கப் துள் ஓட்ஸ் சேர்க்கவும். இதையெல்லாம் ஒன்றாக கலந்து அதன் பின் அடுப்பை அணைக்கவும். உங்கள் கைகளில் நெய் தடவிக் கொண்டு சிறிய லட்டு போன்று உருட்டி சாப்பிட்டு மகிழலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here