Home லைப்ஸ்டைல் ஃபேஷன் சூடான தண்ணீரைக் கொண்டு இதெல்லாம் செய்யலாமா?!

சூடான தண்ணீரைக் கொண்டு இதெல்லாம் செய்யலாமா?!

சூடான தண்ணீரைக் கொண்டு இதெல்லாம் செய்யலாமா?!

சமையலறையை சுத்தம் செய்வது அல்லது பல நாட்கள் தொடாமல் விட்ட மேற்பரப்புகளில் இருந்து பாக்டீரியாக்களை அகற்றுவது போன்ற உங்கள் அன்றாட பிரச்சினைகளைச் சரிசெய்ய சூடான தண்ணீரைப் பயன்படுத்துவது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோனோர் குடிப்பதற்கு, சமைப்பதற்கு அல்லது குளிப்பதற்கு மட்டுமே தினசரி அடிப்படையில் வெந்நீரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சூடான தண்ணீரைக் கொண்டு வீட்டு வேலைகளை எளிதில் கையாள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்டீரியாக்கள் அற்ற சமையல் மேடை

சமையல் மேடைகள் தான் பாக்டீரியாக்களின் வாசம் செய்யும் இடமாக இருக்கிறது. அது உங்களின் ஆரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும். நாம் சமைக்கும் போது சிறிய உணவுத் துகள்கள் பெரும்பாலும் அங்கும் இங்கும் சிதற நேரிடுகிறது. ஆனால் நாமோ உணவு உண்ட பின்னர் தான் இந்த மேற்பரப்புகளைச் சுத்தம் செய்கிறோம். அவ்வாறு இருக்கையில் இந்த இடைப்பட்ட நேரத்தில் நோய்க்கிருமிகள் இனப்பெருக்கம் செய்து, மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள கரண்டிகள் மற்றும் இதர சாமான்கள் மீதும் ஒட்டிக் கொண்டு விடுகிறது. இதனால் தான் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்களுக்கு நாம் ஆளாகிறோம்.

இந்த பிரச்சனையை எளிய முறையில் சமாளிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு முழு எலுமிச்சை மற்றும் 1 டீஸ்பூன் உப்பு அல்லது பேக்கிங் சோடாவை அதில் சேர்த்து கலக்க வேண்டும். நீங்கள் சமைத்து முடித்த உடனேயே , ஒரு சுத்தமான துணியை இந்த கலவையில் நனைத்து உடனடியாக சமைக்கும் இடத்தை சுத்தம் செய்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் பாக்டீரியாக்களை எளிதில் வென்று ஆரோக்கியமாக இருக்கலாம்.

துர்நாற்றம் அகற்றுவது

இறைச்சி, மீன் அல்லது முட்டை போன்ற உணவு வகைகளை சமைத்த பின்னரும் வெட்டுதல் பலகையிலோ அல்லது சமையல் மேடைகளைச் சுற்றியோ ஒரு விதமான வாசனையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இதனைப் போக்க நாம் சிறிது சூடான கொதிக்கும் நீரில், சுண்ணாம்பு, இலவங்கப்பட்டை அல்லது கிராம்புகளைத் தூவவும். இந்த நீரைப் பயன்படுத்தி சமையல் மேடைகளின் மேற்பரப்புகளைச் சுத்தம் செய்யுங்கள், அது அனைத்து விதமான துர்நாற்றத்தையும் நீக்க வல்லது.

எளிதில் கறைகளை நீக்குவது

திராட்சை, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட உணவுகளால் சமையல் துணிகளில் ஏற்படும் கறைகளை நீக்குவதற்குச் சூடான தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில், சிறிது உப்பு அல்லது சமையல் சோடா சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின்னர் கறை படிந்த துணியை அதில் ஊர வைத்துத் துவைத்தால் கறையை அகற்றலாம். இருப்பினும், இது அனைத்து கறைகளுக்கும் வேலை செய்யாது. ஆகையால் நீங்கள் துணிகளை வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பு ஆகியவற்றில் ஊறவைத்து துவைத்தால் கறையும் போய்விடும் உங்கள் வேலையும் எளிதில் முடியும். இதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை

மைக்ரோவேவ் அடுப்பை சுத்தம் செய்வது

சூடான தண்ணீரைக் கொண்டு மைக்ரோவேவ் அடுப்பை சுத்தம் செய்வது எளிதான காரியம் அல்ல. அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தண்ணீர் மற்றும் ஒரு பாதி எலுமிச்சை போட்டு மைக்ரோவேவ் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து மூடவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரிலிருந்து வரும் நீராவி நோய்க்கிருமிகளை அளித்துத் அடுப்பை தூய்மைப்படுத்தும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு நீங்கள் துணி கொண்டு சுத்தம் செய்யலாம். இது மைக்கரோவேவ் அடுப்பில் உள்ள எண்ணை பசையை அகற்றி புதியது போன்று தோற்றம் அளிக்கும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here