Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் பல்லை பளிச்சுனு..பாதுகாப்பா வைச்சுக்க சில டிப்ஸ்

பல்லை பளிச்சுனு..பாதுகாப்பா வைச்சுக்க சில டிப்ஸ்

நலமாக பல்லைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பல்லின் ஆரோக்கியம் ( Teeth Tips ) உணவை மென்று தின்ன உதவுவது மட்டுமின்றி, இதில் ஒரு உளவியலும் அடங்கியுள்ளது. அதன்படி பார்த்தால் பற்கள் நலமாக இல்லை என்றால், மனதளவிலும் யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, பல் ஆரோக்கியமாக இல்லையென்றால், உணவு அருந்துவதில் சிரமம் ஏற்பட்டு, உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும். இதில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதனால், பல்லை நலமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும்.

அனைவருக்குமான அட்வைஸ் இது:

தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். காலையில் எழுந்ததும் ஒரு முறை பல் துலக்குங்கள், இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு முறை பல் துலக்குங்கள். இதனால் பற்சிதைவை உண்டு பண்ணும் தேவையில்லாத பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

பல் பாழாவதற்கு சர்க்கரை மட்டும் தான் காரணமா?

சர்க்கரை பொருட்கள்தான் பல் சிதைவை ஏற்படுத்துகின்றன என மக்கள் பொதுவாக நினைப்பார்கள். ஆனால், பல் சிதைவு சர்க்கரையால் மட்டுமின்றி, பற்களில் அல்லது பல்லின் இடையில் சிக்கியுள்ள எந்த வகையான உணவுத் துகள்களாலும் ஏற்படும். அதனால் இரவிலும் பல் துலக்குவது ரொம்ப முக்கியம்.

அப்போ உணவுப் பழக்கம்?

பல் துலக்குவது, சுத்தம் செய்வது மட்டும் பல்லை ஆரோக்கியமாக வைக்காது. மாறாக, பல்லுக்கு உகந்த கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை அதிகமான உணவு, பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

பல்லை சரிவர கவனிக்க என்ன செய்ய வேண்டும்?

பால் பற்களை உடைய குழந்தைகளின் பல்லை சரிவர கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பல் வளர்ச்சி முரண்பாடு, வாயில் உள்ள எலும்பு அமைப்புத் தொடர்பான சில குறைபாடுகளை சிறுவயதிலேயே சரி செய்ய முடியும்.

நீரிழிவு நோயாளிகள் என்ன செய்யலாம்?

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி, பல்லைக் கட்டாயம் பராமரிக்க வேண்டும். ஈறுகள் சேதமடைந்தால், பற்கள் மட்டுமின்றி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதனால் பல்லை சுத்தமாக வைக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்?

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அப்போது ஈறு வீக்கம், ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும். அதனால் அப்போது பற்களை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.

மொத்தத்தில் பல்லை முறையாக பராமரித்தால் மட்டுமே உறுதியான, பளிச்சென்று பல் இருக்கும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here