Home செய்திகள் அரசியல் அங்கதான் நீங்க., இங்க நாங்கதான்: நீங்க இன்னும் வளரனும்: பாஜகவுக்கு அதிரடி பதிலளித்த அதிமுக செல்லூர்...

அங்கதான் நீங்க., இங்க நாங்கதான்: நீங்க இன்னும் வளரனும்: பாஜகவுக்கு அதிரடி பதிலளித்த அதிமுக செல்லூர் ராஜூ!

கொரோனா கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் போராடி வந்தாலும் மறுபுறம் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. 2021-ல் தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் வளம் வரத்தொடங்கியுள்ளது.

திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து வந்தாலும் யாருக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என ஒரு விவகாரம் உள்ளது. மறுபுறம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பாஜக, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் வாக்குவாதம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் தமிழக தொலைக்காட்சி செய்தியாளர்கள்/ ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் அவர் பேசியதாவது, இந்தியாவிலேயே முதன்முறையாக செய்தியாளர்களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்து கொடுத்துள்ளோம். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது இருப்பை ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்காக தினசரி அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என கூறினார்.

ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவது என்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது, பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற எச்.ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எச்.ராஜா எதாவது பேசிகொண்டே இருப்பார். பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்தில் இன்னும் வளர வேண்டும். மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான் என்றார்.

அதேபோல் பாஜக தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் சவாரி செய்ய முடியும் என்பது தான் நிலைப்பாடு என கூறினார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here