Home செய்திகள் அரசியல் அமித்ஷா, பாஜக முதல்வர், ஆளுநருக்கு தொற்று உறுதி: குறிவைக்கும் கொரோனா!

அமித்ஷா, பாஜக முதல்வர், ஆளுநருக்கு தொற்று உறுதி: குறிவைக்கும் கொரோனா!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று 52,783 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளவில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் தான் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 49,038 பேருக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் 24,801 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Amit-shah-corona-virus.
Amit-shah-corona-virus.

இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு சென்னை காவேரி மருந்துவனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஆளுநருக்கு லேசான தொற்று ஏற்பட்டுள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், மருத்துவ குழு தொடர்ந்து அவரை கண்காணிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், எனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதும், நானாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களே தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன், என கூறியுள்ளார்.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாநில அமைச்சர் கமல் ராணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here