Home செய்திகள் அரசியல் மீண்டும் காற்றில் ஊழலா?- பாரத் டெண்டர் ரத்தும்., திமுக தலைவர் கண்டனமும்

மீண்டும் காற்றில் ஊழலா?- பாரத் டெண்டர் ரத்தும்., திமுக தலைவர் கண்டனமும்

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் குறித்து தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும் என திமுக ஸ்டாலின் வலியுறித்துயுள்ளார்.

ஆளும் பாஜக அரசின் பிரதான திட்டத்தில் ஒன்று டிஜிட்டல் இந்தியா. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னிருத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பாரத் நெட் திட்டம். இந்த திட்டமானது கிராமங்களில் இணையத்தை அரசு நலத் திட்டங்களை கொண்டு சேர்த்து டிஜிட்டல் மயமாக்குவதுதான்

இந்தியாவின் முதுகெழும்பான கிராமங்களில் வேளாண் தொழில் மட்டுமின்றி அதிநவீன தொழில்நுட்பங்களும் கொண்டு செல்லும் என்ற நோக்கில் பாரத் நெட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இணையத்தின் சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவிகிதம் மலிவு விலையில் வழங்குவதே ஆகும்.

கடந்த 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் பாரத் நெட் இணையதள இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தொடர்ந்து பாரத்நெட் திட்டம் மூலம் கிராமங்களை இணைக்கும் நடவடிக்கை அதிதீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்துக்கான டெண்ட்ர விடப்பட்டது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் குறித்து சில நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பல விளக்கங்களை அளித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது இதை ஏற்க மறுத்த மத்திய அரசு டெண்டரை ரத்து செய்தது.

அதிவேக இன்டெர்நெட் இணைப்பிற்கு சுமார் ரூ.1,950 கோடியில் 12524 கிராமங்களில் இணைக்க முடிவு செய்தது. இந்த திட்டங்களுக்கான கருவிகள் வாங்க டெண்டர் விட்டதில் கொள்முதலுக்கான மீறப்பட்டதாகவும் , இந்த டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறுடெண்டர் விடும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கத்தி படத்தில் நடிகர் விஜய் ஒரு வசனம் பேசியிருப்பார் காற்றை வைத்து கோடிக் கோடியாக ஊழல் செய்து ஊருயா இதுவென. ஆம், 2 ஜி அலைக்கற்று ஒதுக்கீட்டை பெற்றிருந்த டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா,கனிமொழி திமுக தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் உள்ள 10 பேர் ஒன்பது நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆ.ராசா-விடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

அலைக்கற்றை ஏலத்தில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது இதுகுறித்து ஆ.ராசா 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் 2 ஜி அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்தது.

மேலும் 2 ஜி ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உரிமம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக கூறி இதில் 17 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இதில் கனிமொழி ஜாமீனில் வெளியானார்.

தொடர்ந்து ஆ.ராசா, கனிமொழி ஆகிய இருவர் உள்பட 10 பேர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பல்வேறு விசாரணைக்கு பிறகே ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண்முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ராஜினாமா செய்வாரா டிஸ்மிஸ் செய்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here