Home செய்திகள் இந்தியா நீங்களே இப்படி செய்யலாமா?- வழக்கறிஞரின் செயலுக்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி!

நீங்களே இப்படி செய்யலாமா?- வழக்கறிஞரின் செயலுக்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி!

இந்திய தண்டனை சட்ட பிரிவு 498-ஏ (ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்), 304-பி ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரூபேந்திர குமாருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் சவுத்ரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்றம் இயங்க முடியாதநிலை உள்ளது. இதையடுத்து வழக்குகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.

The Government of India has banned 106 Chinese operatives

அதன்படி ரூபேந்திர குமாருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் சவுத்ரி நீதிமன்றத்தில் மின்னஞ்சல் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஆன்லைன் மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தடை செய்யப்பட்ட சீன செயலியான கேம்ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.

இதைபார்த்த கூடுதல் அமர்வு நீதிபதி சுனில் சவுத்ரி, ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு தடை செய்யப்பட்ட கேம்ஸ்கேனர் செயலியை தவிர்க்கும்படியும், சட்டப்பணிகளுக்கு கேம்ஸ்கேனர் செயலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். வழக்கறிஞரே இதுபோன்று தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்தியதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்காலத்தில் தடை செய்யப்பட்ட சீன செயலியை தவிர்க்கும்படியும் குறிப்பாக சட்டப் பணிகளுக்கு கேம் ஸ்கேனர் போன்ற செயலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் டெல்லி மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளது.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதாக 106 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. சீன செயலிகள் மீதான தடை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here