கொரோனா நோய் தொற்று அதிகளவு பலியாவது வளரும் நாடுகளே: காரணம் இதுதான்- வெளியான ஆய்வு முடிவு!

0
183

வளர்ந்து வரும் நாடுகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாகுவதற்கான காரணங்கள் தொடர்பான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டெல்லி மாநிலம் தான் முதலில் அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி வழங்கியது. நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் போதாத நிலை ஏற்பட்டு வரும் இந்த அவல சூழ்நிலையில் வீட்டு தனிமைப்படுத்தல் என்ற முறை சரியாக செயல்படுத்தப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கருதி இந்த செயல்முறை முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள வீட்டு அமைப்பு முறைகள் இந்த தனிமைப்படுத்ததலுக்கு உகந்ததாக இல்லை. 54 வளரும் நாடுகளில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை முன்னிருத்தி ஆய்வு நடத்தப்பட்டது. அதி்ல் பெரும்பான்மையான வீடுகள் தனிமைப்படுத்தலுக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை பின்பற்றுதலில் சிரமங்கள் ஏற்படுவதால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க பொருளாதார ஆராய்ச்சி பணியகம் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 நோய் தொற்று பரவலுக்கும் வீட்டுச் சூழலுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கும்படியான காரணத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நெரிசலான குடியிருப்புகள் மற்றும் தனியார் கழிப்பறைகள் இல்லாததால் தனிமைப்படுத்துதல் திட்டம் கடினமாக அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்னை முக்கிய காரணமாக இருப்பதால் உலக சுகாதார அமைப்பின் கூற்றான கை கழுவுதல் திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

துணைக் கண்டங்களை பொருத்தவரை இந்தியா பாகிஸ்தானை விட சிறப்பாக இருந்தாலும் ஆய்வு செய்த 54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 14 வது இடத்தில் தான் உள்ளது. எனினும் மற்ற வளரும் நாடுகளாலும் அரசு அறிவிப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய இயலவில்லை என்பதால் அவர்களும் நோய் தொற்று பரவலுக்கு பலியாகி வருகின்றனர்.

வளரும் நாடுகளின் ஏழ்மை மற்றும் வருமையில் வாடும் குடும்பங்களின் காரணாமாக கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது சிக்கலாக இருக்கிறது என்பதால் உலக சகாதார அமைப்பின் வழிமுறைகளை பின்பற்ற இயலாத குடும்பங்கள் இந்த நோய் தொற்றுக்கு பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தளர்வுகள் ஒரு பக்கம் அறிவிக்கப்பட்டு வருவதும் இந்த நோய் தொற்ற அதிவேகமாக பரவுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டுவசதி மற்றும் தண்ணீர் பிரச்னையை மேம்படுத்துவது குறுகிய கால கட்டத்தில் நடைமுறை படுத்த இயலாத காரியம். இருப்பினும் அனைவரின் தேவையை கண்டறிந்து அதற்கேற்ப கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மட்டுமே நோய்த் தொற்று குறைக்கமுடியும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்தாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here