Home செய்திகள் அரசியல் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அத்துமீறுகிறதா.....?!

ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அத்துமீறுகிறதா…..?!

தூதுக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இதில் பென்னிக்ஸ் என்பவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். அவர் தனது கடையை விதிமுறைகளை மீறி அதிக நேரம் திறந்து வைத்ததாகக் கூறி அவர் மீதும் அவர் தந்தை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் விசாரணைக் கைதிகளாக கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்த விசாரணை நடத்தியது. அப்போது லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் மாவட்ட நிர்வாகம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.

இதற்கிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே அவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் மரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த வழக்கை கோவில்பட்டி மேஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் சென்று விசாரித்தார். ஆனால் காவல் நிலைய ஆணையாளர்கள் அவருக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு பணி புரிந்து வந்த தலைமை காவலர் ரேவதி சாட்சி அளிப்பதாக தெரிவித்தார். அதில் காவலர்கள், கைதிகள் இருவரையும் இரவு முழுவதும் லத்தியாள் அடித்தனர் என்றும் அதன் கரை மேஜையில் படிந்துள்ளதை தாம் பார்த்தாகக் கூறியிருக்கிறார். இந்த சாட்சி தான் வழக்கின் முக்கிய திருப்புமுணையாக அமைந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த வழக்கு சிபிஐ-யிடம் முழுவதுமாக ஒப்புடைக்கும் முன் உள்ள இடைப்பட்ட காலத்தில் சிபிசிஐடி காவல் துறையிணர் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தந்தை மகன் உயிரிழப்பில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இதற்கிடையே லாக்அப் மரணம் விவகாரத்தில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் யார் அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு

ப்ரண்டஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது காவல் ஆய்வாளர்களுக்கு உதவி செய்யும் பொருட்டில் நிறுவப்பட்ட அமைப்பு. இதில் காவல் துறையில் இணைய முடியாத பல்வேறு இளைஞர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரத்தில் ப்ரண்டஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதற்கு அந்த அமைப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இதன் இன்னொரு திருப்பமுணையாக இந்த சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலமாகச் செயல்படக்கூடிய ‘சேவாபாரதி’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இந்த அமைப்பினருக்கு தமிழக காவல்துறை ஊர்காவல் படையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தொடங்கிய பிரதீப் பிலிப் தான் சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடியின் தற்போதைய டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here