சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் என்ற பெயர் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை, ஆலந்தூர் மற்றும் சென்டரல் மெட்ரோ ரயில் நிலையங்களை பெயர் மாற்றி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி அறிஞர் அண்ணா என்ற பெயர் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திற்கும், எம்ஜிஆரின் பெயர் சென்ட்ரல் மெட்ரோ நிலைத்திற்கும், ஜெயலலிதாவின் பெயர் சென்னை மெட்ரோ நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களை வைக்க பரிந்துரைக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சூழலில் பெயர் மாற்றங்கள் தேவைதானா என்றும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதை ஓட்டி இது போன்ற செயல்களில் ஆளும் கட்சியினர் ஈடுப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் அண்ணா, எம்ஜிஆர், அம்மா என்று முன்று எழுத்து மந்திரம் போல் உள்ள தலைவர்களின் பட்டியிலில் இபிஎஸ் இடம்பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் எதிர்க்கட்சி தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.